'ஜெய்பீம்' படம் தொடர்பாக நடிகர் சூர்யா, ஜோதிகா, மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இயக்குனர் பி.ஜே.ஞானவேல் இயக்கத்தில், சூர்யா, ஜோதிகா, தயாரிப்பில் லிஜோமோல், மணிகண்டன், சூர்யா ஆகியோரது நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓடிடி தளத்து வெளியான திரைப்படம் 'ஜெய்பீம்'. இந்த படத்திற்கு, தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில்.. சிலர் இந்த படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்கு எதிராகவும் போர் கொடி தூக்கினர்.
குறிப்பாக 'ஜெய்பீம்' படத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை தவறாக சித்தரிக்கும் வகையிலும், அவர்கள் மனதை புண்படுத்தும் வகையிலும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது. மேலும் அவர்கள் வழிபடும் அக்கினி குண்டத்தையும், மகாலட்சுமியையும் குறிப்பிடும் விதமாக சில காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்ததால், இந்த படத்தின் தயாரிப்பாளர்களான சூர்யா, ஜோதிகா, மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் படி ருத்ர வன்னிய சேனா அமைப்பை அமைப்பின் நிறுவனத் தலைவர் சந்தோஷ் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
மேலும் செய்திகள்: உதயநிதிக்கு மட்டும் அனுமதி தருவார்களா? நமக்கு இல்லையா... - கோபத்தில் கொந்தளித்தாரா இயக்குனர் ஷங்கர்?
கடந்த ஆண்டு இந்தப் புகார் மனு மீது வழக்கு பதிவு செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, இயக்குனர் ஆகியோருக்கு எதிராக வேளச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக சூர்யா மற்றும் இயக்குனர் தரப்பில் இருந்து இந்த வழக்கை மீதான விசாரணையை தடை செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் செய்திகள்: மீண்டும் ஹனி மூனா..? திடீர் என ஜோடியாக வெளிநாட்டுக்கு பறந்த நயன் - விக்கி ஜோடி!
இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, இந்த புகாரை தாக்கல் செய்யும் முன்பே 'ஜெய்பீம்' படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட அக்னிகுண்டம் மற்றும் மகாலட்சுமி காலண்டர் குறித்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாகவும், குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் காட்சி அமைக்கப்பட்டதாக கூறும் அளவிற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என்று சூர்யா மற்றும் இயக்குனர் தரப்பில் இருந்து வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி சூர்யா, ஜோதிகா, மற்றும் இயக்குனர் ஞானவேல் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.