
இன்று இந்தியா முழுவதும் ரக்ஷா பந்தன் விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக கே ஜி எஃப் நாயகன் யாஷ் தனது சகோதரி உடன் இந்த விழாவை கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகிய நிலைகள் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது தங்கை கையால் ராக்கி கட்டிக் கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வாழ்த்துக்களை குவித்து வருகிறது.
அந்த வீடியோவில் மேஜைக்கு அருகில் அமர்ந்திருக்கும் நயன்தாரா மற்றும் அவரது தங்கை இருவரும் மாறி மாறி ராக்கி கட்டிக் கொள்கின்றனர். இந்த பதிவை வெளியிட்டுள்ள டாக்டர் ரினிதா ராஜன், எப்போதும் வலிமையான மனிதர்களில் ஒருவராக இவருடன் நட்பையும் சகோதரத்துவத்தையும், பரஸ்பரம் மரியாதையும் கொண்டிருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...laal singh chaddha twitter review : லால் சிங் சாத்தா மூலம் வெற்றி கண்டாரா அமீர்கான்...ட்வீட்டர் ரிவ்யூ இதோ!
மேலும் செய்திகளுக்கு...கேஜிஎப் நாயகனின் சகோதரி யார் தெரியுமா? வைரலாகும் ராக்கி பாயின் ரக்ஷபந்தன் போட்டோஸ் !
சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதல் கரம் பிடித்த நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர். தனக்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். ஏழு வருட காதல் பந்தத்தை கடந்த ஜூன் மாதம் திருமண உறவாக மாற்றிய இந்த ஜோடி சமீபத்தில் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றிருந்த வீடியோக்களும் போட்டோக்களும் வைரலாகி ரசிகர்களை கவர்ந்தது. இதற்கிடையே இவர்களது திருமண புகைப்படங்களும், வீடியோக்களும் அவ்வப்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வாழ்த்துக்களை குவித்து வருகிறது.
தற்போது நயன்தாரா ஷாருக்கான் நாயகனாக நடிக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். நேற்று உடல்நிலை குறைவு காரணமாக நயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கூறப்படுகிறது. இந்த நிலையில் நயன்தாரா மற்றும் அவரது தங்கையின் வீடியோ வெளியாகி அவரது ரசிகர்களை ஆசுவாசப்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..சேலையில் கலங்கடிக்கும் சீதாராமம் நாயகி...முந்தானையை சரியவிட்டு ஹாட் போஸ்..
சமீபத்தில் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். இதில் விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். முக்கோண காதல் கதையை கொண்ட இந்த படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றி கண்டது. இந்நிலையில் ரஜினியின் ஜெயிலர் மற்றும் விக்கி இயக்க உள்ள அஜித்தின் அடுத்த திட்டத்தில் நயன் இணைவார் என தெரிகிறது. இதற்கிடையே ஜெயம் ரவியுடன் ஒரு படத்தில் பிஸியாக உள்ளார் நயன்தார.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.