தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் தளபதி விஜய் அவர்களின் லியோ திரைப்படம், பிரம்மாண்டமான முறையில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அண்மையில் ஒரு புதிய சர்ச்சை வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது தமிழ் சினிமாவின் மோஸ்ட் வண்டெட் இயக்குனராக மாறியுள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக தளபதி விஜய் அவர்கள் நடிக்கும் திரைப்படம் தான் லியோ. நடிகை திரிஷா, நடிகர்கள் சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலி கான் சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே லியோ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ள நிலையில், சில வாரங்களுக்கு முன்பு லியோ திரைப்படத்தில் இருந்து "நான் ரெடி தான்" பாடல் வெளியானது. அந்த பாடல் வெளியான நாள் முதல் ரசிகர்கள் இதை மிகப்பெரிய அளவில் கொண்டாடிவரும் அதே நேரம், பெரும் சர்ச்சைகளிலும் லியோ திரைப்படம் சிக்கி வருகின்றது.
இன்னும் இந்த பிரச்சனைகளே ஓயாத நிலையில், சில நாட்களுக்கு முன்பு லியோ படத்திற்கு மீண்டும் ஒரு சிக்கல் வந்தது. அதாவது நான் ரெடி தான் பாடலில் நடனமாடிய சுமார் 1300 நடன கலைஞர்களுக்கு சுமார் 4 மாதங்களாகியும் இன்னும் பேசிய சம்பளம் வரவில்லை என்று சிலர் புகார் அளித்துள்ளனர். ஒரு நாளிற்கு 2500 ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது
இந்நிலையில் இன்று லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனத்தை அணுகிய டான்சர்கள், 4 மாதமாகியும் இன்னும் சம்பளம் வராமல் உள்ளது என்று தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆனால் தயாரிப்பு நிறுவனம், டான்சர்கள் சங்கத்தில் இதுகுறித்து பேசியுள்ளோம் என்றும், அங்கு தான் சென்று டான்சர்கள் பேச வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆனால் தயாரிப்பு நிறுவனம் தான் சம்பள பணத்தை இன்னும் அளிக்கவில்லை என்று டான்சர்கள் கூற, இன்னும் 3 நாட்களுக்கு இந்த பிரச்சனைக்கு முடிவுக்கான வேண்டும் என்றும் டான்சர்கள் தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக இன்று லியோ திரைப்பட தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.