ஆஹா மாமியார் மேல எவ்ளோ பாசம்.. இன்ஸ்டாகிராமில் உருகிய நடிகை ஜெனிலியா - அவங்க அத்தை யாரோட மனைவி தெரியுமா?

Ansgar R |  
Published : Oct 10, 2023, 04:29 PM IST
ஆஹா மாமியார் மேல எவ்ளோ பாசம்.. இன்ஸ்டாகிராமில் உருகிய நடிகை ஜெனிலியா - அவங்க அத்தை யாரோட மனைவி தெரியுமா?

சுருக்கம்

மும்பை மாநகரில் பிறந்து இந்திய மொழிகள் பலவற்றுள் சிறந்த நடிகையாக இன்றளவும் திகழ்ந்து வருபவர் தான் ஜெனிலியா. கடந்த 2003 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகப் பிரவேசம் அடைந்தார்.

அதே 2003 ஆம் ஆண்டு தமிழில் வெளியான சங்கர் அவர்களின் "பாய்ஸ்" திரைப்படம் இவருக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான சச்சின், 2006ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான சென்னை காதல், 2008ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சந்தோஷ் சுப்பிரமணியம், 2010ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான உத்தம புத்திரன், மீண்டும் வேலாயுதம் என்று வெகு குறைந்த அளவிலேயே தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். 

இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு, தன்னுடன் தனது முதல் திரைப்படத்தில் நடித்த நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் அவர்களை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஜெனிலியாவிற்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றாலும், இன்றளவும் படங்களில் நடித்து வரும் ஜெனிலியா இன்று பிறந்தநாள் கொண்டாடும் தனது மாமியாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

வெளிநாட்டில் வெரைட்டியாக கவர்ச்சி காட்டி வெறி ஏத்தும் மாளவிகா மோகனன் - வைரலாகும் செம்ம ஹாட் கிளிக்ஸ் இதோ

அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில் "ஒரு முற்போக்கான பெண் எப்படி இருப்பாள் என்று எனக்குக் கற்றுக் கொடுத்ததற்கு நன்றி, என்னை உங்கள் மகளை போல் நேசித்ததற்கு நன்றி, என் மராத்தியை தினமும் மேம்படுத்தியதற்கு நன்றி மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக என் அத்தையாக இருப்பதற்கு நன்றி" என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

 

ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் ஒரு சிறந்த பாலிவுட் நடிகராவார், இன்றளவும் அவர்கள் இருவரும் பாலிவுட் உலகின் Cute தம்பதிகளாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஜெனிலியாவின் மாமியார் பெயர் வைஷாலி தேஷ்முக், இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராக விளங்கிய விலாஸ்ராவ் தேஷ்முக் அவர்களின் மனைவி ஆவர். கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விலாஸ்ராவ் தேஷ்முக் அவர்கள் மரணித்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் நாசரின் தந்தை காலமானார்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

HBD Rajinikanth : கோலிவுட்டின் ‘பவர்ஹவுஸ்’... இந்திய சினிமாவின் ராஜாதி ராஜா ரஜினிகாந்த் பிறந்தநாள் இன்று..!
மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!