Breaking: நடிகர் நாசரின் தந்தை காலமானார்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!

By manimegalai a  |  First Published Oct 10, 2023, 4:14 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகரான, நாசரின் தந்தை மெகபூப் பாஷா உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 



திரையுலகில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர், பாடகர் மற்றும் அரசியல்வாதி என தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளவர் நாசர். சில படங்களில் மட்டுமே இவர் ஹீரோவாக நடித்துள்ள நிலையில், பல படங்களில், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானார். எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும், அதனை அப்படியே உள்வாங்கி கொண்டு நடிக்கும் அபார திறன் கொண்டவர். 

தமிழ் மற்றும் இன்றி தெலுங்கு, மலையாளம் , கன்னடம் , ஆங்கிலம் , இந்தி மற்றும் பெங்காலி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். அதே போல் இரண்டாவது முறையாக நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்று தலைவரானார். தென்னிந்திய திரையுலகின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவராக இருக்கும் நாசரின் தந்தை மெகபூப் பாஷா கடந்த சில வருடங்களாகவே உடல்நல குறைவு காரணமாக, நாசரின் சகோதரர் வீட்டில் வசித்து வந்த நிலையில், தற்போது உயிரிழந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இவர் செங்கல்பட்டில் நகைகளைப் பாலிஷ் செய்து தான் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றி வந்தார். தந்தையின் ஆசைக்காகவே முதலில் நாசர் கூத்து பட்டறையில் சேர்ந்து நடிப்புப் பயிற்சி பெற்றார். பின்னர் நடிப்பு பயிற்சி கல்லூரியில் சேர்ந்து படித்தார். படிப்பை முடித்த பின்னர் உடனடியாக இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், பெற்றோர் கொடுத்த ஊக்கமே இவரை உலகம் அறியும் நடிகராக உலரவைத்து.

தாவணியை சரிய விட்டு... இடையழகை காட்டுவதில் ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுக்கும் லாஸ்லியா! லேட்டஸ்ட் போட்டோஸ்!

95 வயதாகும் மெகபூப் பாஷா, நாசரின் சகோதரர் ஜவஹர் தந்தை இல்லத்தில் வசித்து வந்த நிலையில், இன்று வயது மூப்பு மற்றும், உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரின் மரணம் குறித்து கேள்வி பட்ட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளம் மூலம் தங்களின், இரங்கலை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!