தூத்துக்குடி அருகே உள்ள கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதை அறிந்த நடிகர் விஷால் அவர்களுக்கு குடிநீர் வசதியை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். கடந்த சில ஆண்டுகளாக இவர் நடித்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வந்த நிலையில், அண்மையில் வெளிவந்த மார்க் ஆண்டனி படம் மூலம் தரமான கம்பேக் கொடுத்துள்ளார் விஷால். மார்க் ஆண்டனி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்துள்ளது. நடிகர் விஷாலின் கெரியரில் முதன்முறையாக ரூ.100 கோடி வசூலை அள்ளிய படம் என்கிற பெருமையை மார்க் ஆண்டனி பெற்றுள்ளது.
மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால் நடிப்பில் புதிய திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது. விஷாலின் 34-வது திரைப்படமான இதை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். ஏற்கனவே விஷால் - ஹரி கூட்டணியில் வெளிவந்த தாமிரபரணி, பூஜை ஆகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. தற்போது விஷால் 34 படம் மூலம் அவர்கள் இருவரும் ஹாட்ரிக் ஹிட் கொடுக்க தயாராகி வருகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
விஷால் 34 படத்தில் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குமாரசக்கனாபுரம் என்கிற கிராமத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு படப்பிடிப்புக்காக நடிகர் விஷால் சென்றபோது அங்குள்ள கிராம மக்கள் தங்களுக்கு குடிநீர் வசதி செய்து தரும்படி நடிகர் விஷாலிடம் முறையிட்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட விஷால், தான் தன்னுடைய தேவி அறக்கட்டளை மூலம் அதனை நிறைவேற்றி தருவதாக கூறினார்.
இதையடுத்து குமாரசக்கனாபுரம் கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன் என்பவரை அழைத்து பேசிய விஷால், அக்கிராமத்திற்கு தன்னுடைய தேவி அறக்கட்டளை மூலம் போர் போட்டு கொடுத்துள்ளதோடு, 2 சிண்டக்ஸ் டேங்குகளை வாங்கி கொடுத்து அந்த கிராமமக்களின் குடிநீர் பஞ்சத்தை போக்கி உள்ளார். கேட்ட உடன் உதவிய விஷாலுக்கு அக்கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். விஷாலின் இந்த செயலுக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.
ஆகிய ஹிட் படங்களை தொடர்ந்து இயக்கத்தில் நடித்து வரும் என்ற படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் நடந்து வருகிறது. M.குமாரசக்கனாபுரம் ஊராட்சி மக்கள் விஷாலை சந்தித்து, குடிநீர் வசதி இல்லாமல் கஷ்டப்படுவதாக pic.twitter.com/3FnLmfvwTt
— Actor Kayal Devaraj (@kayaldevaraj)இதையும் படியுங்கள்... 2 கணவர்களோடும் தொடர்பில் தான் இருக்கிறேன்... ஜோவிகாவின் தந்தை இவர் தான் - சர்ச்சைகளுக்கு வனிதா விளக்கம்