நுரையீரல் நோயால் பிரபல இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா மரணம்! அதிர்ச்சியில் திரையுலகினர்!

By manimegalai aFirst Published Feb 22, 2019, 5:08 PM IST
Highlights

நடிகை அனுஷ்கா திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய 'அருந்ததி' படத்தை இயக்கி, மிக பெரிய வெற்றியை கொடுத்த பிரபல இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா நுரையீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தெலுங்கு திரையுலகில், 100 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய, இயக்குனரும் , நடிகருமான கோடி ராமகிருஷ்ணா, சமீப காலமாகவே நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இவருடைய குடும்பத்தினர், பிரபல தனியார் மருத்துவமனையில் இவரை அனுமதித்து சிகிச்சையளித்து வந்தனர். இவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சையளித்து கொடுத்தனர்.  ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். 

பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்கியும், ஒரு சில படங்களில் நடித்தும் உள்ள கோடி ராமகிருஷ்ணாவிற்கு, தற்போது 63 வயது ஆகிறது. இவருடைய மரணம் தெலுங்கு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் இயக்கி இருந்த 'அருந்ததி' திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!