
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை சாமி தரிசனம் செய்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று இரவு திருப்பதிக்கு வந்தார். அப்போது அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து இன்று அதிகாலை ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யா உடன் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். தரிசனம் செய்து முடித்த பின்னர் ரஜினிக்கு தீர்த்த பிரசாதங்களை தேவஸ்தான ஊழியர்கள் வழங்கினர். இதைத் தொடர்ந்து வெளியே வந்த ரஜினியை பார்த்தது ரசிகர்கள் தலைவா, தலைவா என கோஷமிட்டு ஆரவாரம் செய்தனர்.
இதையும் படியுங்கள்... காந்தாரா முதல் லவ் டுடே வரை... கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வசூலை வாரிக்குவித்த திரைப்படங்கள் ஒரு பார்வை
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, ஆறு ஆண்டுகளுக்கு பின் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து மகள் ஐஸ்வர்யா உடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். இதுதவிர அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் என்கிற திரைப்படத்திலும் கேமியோ ரோலில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இதையும் படியுங்கள்... வாரிசை மிஞ்சிய துணிவு..! இரு படங்களின் ரன்னிங் டைம் குறித்து வெளியான தகவல்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.