உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது எனக்கு மகிழ்ச்சி… நடிகர் விஷால் கருத்து!!

By Narendran S  |  First Published Dec 14, 2022, 11:52 PM IST

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 


உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால் நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் லத்தி என்ற படத்தை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வரும் 22ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதை அடுத்து நடிகர் விஷால், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் லத்தி திரைப்பட குழுவினர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று, லத்தி பட டிரைலரை திரையிட்டு ரசிகர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றி படத்திற்கான பிரமோஷனில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் லத்தி திரைப்படத்தின் டிரைலர் திரையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் மற்று இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் கலந்துக்கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினர்.

இதையும் படிங்க: விதி என்ன விட்டு வச்சிருக்குனா அதுக்கு ஏதோ காரணம் இருக்குடா மாறா! ரத்தம் தெறிக்க வெளியான 'தலைநகரம் 2' டீசர்!

Latest Videos

undefined

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், லத்தி திரைப்படம் வரும் 22 ஆம் தேதி லத்தி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தி மொழியில் வரும் 30 ஆஆம் தேதி வெளியாகிறது. இதனிடையே ஒவ்வொரு ஊராக சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறேன். இந்த திரைப்படத்தில் ஒரு இரண்டாம் நிலை காவலராக நடித்துள்ளேன். 8 வயது சிறுவனின் தந்தையாக நடித்துள்ளேன். விவாயிகளின் கல்வி மற்றும் மருத்துவ உதவிக்காக தொடர்ந்து உதவி வருகிறேன். எங்கள் குழுவினர் சரியான விவசாயிகளை தேர்வு செய்து அவர்களுக்கான உதவியை மேற்கொள்கின்றனர். விவசாயிகள் குறித்து சரியான திரைப்படம் எடுக்க வேண்டும். பிரச்சனைகள் குறித்து தெரிவிப்பது மட்டுமல்லாமல் அதற்கான தீர்வுகளையும் கூற வேண்டும். உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இதையும் படிங்க: வாரிசை மிஞ்சிய துணிவு..! இரு படங்களின் ரன்னிங் டைம் குறித்து வெளியான தகவல்!

இப்போது தான் அவர் தனது தந்தை பெயரை பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் அவர் வெறும் உதய்-ஆக இருந்த போதில் இருந்தே எனக்கு தெரியும். நானும் அரசியலில் தான் இருக்கிறேன். மக்களுக்காக சேவை செய்து வருவது அரசியல் தான். சிறிய படங்கள் தியேட்டரில் ரிலீஸ் அகும் போது மக்கள் அங்கு செல்வது குறைவாக உள்ளது. சிறிய திரைப்படங்கள் நஷ்டத்தை சந்திக்கின்றன. இலங்கை அகதிகள் முகாமில் எனது திரைப்படங்களை திரையிட நினைக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்பட்டு வருகிறது. எனக்கு அடுத்தடுத்த படங்கள் உள்ளதால் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பில்லை. திருமணம் குறித்து இப்போது முடிவெடுக்கவில்லை. விரைவில் அறிவிக்கிறேன் என்று தெரிவித்தார். 

click me!