திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயில்களுக்கு திரைப்பிரபலங்கள், நடிகர்கள் மற்றும் நடிகைகள் செல்வது வழக்கம். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்ற போது அவருக்கு தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: வாரிசை மிஞ்சிய துணிவு..! இரு படங்களின் ரன்னிங் டைம் குறித்து வெளியான தகவல்!
அவர் கடந்த 12 ஆம் தேதி தன்னுடைய 73 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். ரஜினிகாந்த் வெளியே இருந்த போதிலும் அவரது ரசிகர்கள் பலர் ரஜினிகாந்தின் வீட்டின் முன்பு திரண்டு தங்களை வாழ்த்துகளை கூறியதோடு அன்பளிப்புகளையும் வழங்கினர்.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது எனக்கு மகிழ்ச்சி… நடிகர் விஷால் கருத்து!!
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த், அதிகாலை சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரது வருகையை அறிந்த ரசிகர்கள் அப்பகுதிகளில் குவியத்தொடங்கியுள்ளனர்.