மிஷன் சாப்டர் 1 படத்தில் ஆக்க்ஷன் காட்சிகளில் அதிர வைத்த ஸ்டண்ட் சில்வாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பொதுவாக படத்தில் சண்டை என்றால் ஹீரோவுடன் ஒருவர் அல்லது நான்கு ஐந்து பேர் மோதலாம் இதில் நூற்றுக்கணக்கான ஸ்டண்ட் நடிகர்களை வைத்து ஸ்டண்ட் சில்வா அமைத்திருக்கும் சண்டை காட்சிகள் படம் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள் படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும்போது படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் படத்தில் சண்டை காட்சிகள் பின்னி எடுத்திருக்காங்க என்றும்,சண்டைக் காட்சிகள் மிகப் பிரமாண்டமாக இருக்கின்றது என்றும் ஒட்டுமொத்த ரசிகர்களும் சொல்கிறார்கள்.
இப்படத்தில் ஜெயிலராக நடித்திருக்கும் எமி ஜாக்சனும் அதிரடி ஆக்க்ஷனில் அனல் பறக்க விடுகிறார். இதற்கு காரணம் சண்டை பயிற்சி இயக்குனர் 'ஸ்டண்ட் சில்வா தான்! ஸ்டண்ட் சில்வா, இந்திய சினிமாவில் ஒரு மிக சிறந்த ஸ்டண்ட் இயக்குனர்,ஸ்டண்ட் நடிகர், மற்றும் திரைப்பட இயக்குநரும் ஆவார்.இந்தியாவின் மிக சிறந்த வெற்றிபட இயக்குனரான S.S.ராஜமௌலி இயக்கத்தில் ஜுனியர் NTR நடிப்பில் வெளி வந்து ஆக்ஷனில் மிக பெரிய வெற்றி அடைந்த 'எமதொங்கா' படத்தின் மூலம் ஸ்டண்ட் இயக்கனராக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலயாளம், கன்னடம், ஹிந்தி, மராட்டி, பெங்காலி, மற்றும் சிங்களம் என பல மொழிகளிலும் 300 படங்களுக்கு மேலாக சண்டைபயிற்சியாளராக பணியாற்றி பல அரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.இவர் சண்டை பயிற்சி அளிப்பது மட்டுமின்றி பல படங்களில் நடித்து நல்ல ஸ்டண்ட் நடிகர் என ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
'தல' அஜித் நடிப்பில் வெளிவந்த 'மங்காத்தா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் தான் இந்த ஸ்டண்ட் சில்வா. பிறகு அதே தல அஜித்துடன் அருண் விஜய் நடிக்கும் 'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளை பற்றி சொல்லவே வேண்டாம் சும்மா திரையில் அதிர வைத்திருப்பார்.இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டுமென்றால் நடிகர் அருண் விஜய்க்கு இந்த திரைப்படம் மூலம்தான் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அந்தஸ்து கிடைத்து தொடர்ந்து பிசியான நடிகராக வலம் வருவதற்கு இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் ஒரு உதாரணம் என்றே சொல்லலாம்.
பொதுவாகவே அன்றைய காலகட்டத்தில் இருந்து இன்றைய காலகட்டம் வரைக்கும் சினிமாவில் வில்லனாக நடிக்கும் எல்லோரும் நிஜத்தில் நல்லவர்கள்தான் அந்தவிதத்தில் ஸ்டண்ட்சில்வாவும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல. பார்ப்பதற்கு நூடுல்ஸ் தலையுடன் முகத்தில் தழும்புடன் கரடு முரடாக காட்சியளிக்கும் இந்த ஸ்டண்ட் சில்வாவின் மனம் ஒரு பச்சை குழந்தை போன்றது,இது பார்ப்பவர்களுக்கு தெரியாது,ஆனால் அவருடன் பழகியவர்களுக்கு மட்டும்தான் தெரியும் அவர் ஒரு சொக்கத்தங்கம் என்று.
இதற்க்கு சான்றாக இவர் தமிழில் இயக்கிய முதல் திரைப்படம் ‘சித்திரை செவ்வானம்’ சமுத்திரக்கனி மற்றும் பிரபல நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியாகி பார்த்த அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்து மிகபெரிய எமோஷனல் வெற்றி படமாக அமைந்தது. இத்திரைபடத்தின் மூலமாக சமூகத்தில் பெண் பிள்ளைகளை எவ்வாறு பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்றும் சோஷியல் மீடியாவை எப்படி கையாளவேண்டும் என்றும் ஒரு உன்னதமான கருத்தை சொல்லி,இந்த படத்தை ஒரு சாதாரண படமாக இல்லாமல் மிகபெரிய பாடமாக செதுக்கியிருந்தார்.
சித்திரை செவ்வானம் படத்தை இயக்கிய பிறகு ஏற்கனவே ஒப்புக்கொண்ட பல படங்களின் ஸ்டண்ட் இயக்குனர் பணி இருந்ததால் உடனே படங்கள் இயக்க முடியவில்லை. இந்த 2024 ஆம் ஆண்டு மிக பிரமாண்டமான சூப்பரான அதிரடி ஆக்க்ஷன் திரைப்படத்தை இயக்க போகிறார் ஸ்டண்ட் சில்வா. செய்யும் தொழிலே தெய்வம் என்றும் நாம் செய்யும் தொழிலுக்கு என்றைக்குமே உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பதே இவருடைய கொள்கை. இதுவே இவரின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக உள்ளது.
எந்த வேலையாக இருந்தாலும் அந்த வேலையை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கி அடிப்பதில் வல்லவரான ஸ்டண்ட் சில்வா இந்த பொங்கலில் மிஷன் சாப்டர் -1 படத்தின் வெற்றியை தொடர்ந்து அவரின் திரையுலக வாழ்வில் இனி எல்லாம் ஏறு முகமே.