5 வருடத்துல ஒரு படம் கூட ரிலீஸ் இல்ல, ஆனாலும் சூப்பர் ஸ்டார், சொத்து மட்டும் ரூ.300 கோடி, யாருன்னு தெரியுமா?

Published : Jan 24, 2024, 04:33 PM IST
5 வருடத்துல ஒரு படம் கூட ரிலீஸ் இல்ல, ஆனாலும் சூப்பர் ஸ்டார், சொத்து மட்டும் ரூ.300 கோடி, யாருன்னு தெரியுமா?

சுருக்கம்

நடிகையும், விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா கடந்த 5 ஆண்டுகளில் ஒரு படங்களில் கூட நடித்து வெளியிடவில்லை ஆனால், அவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ.300 கோடி என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அது தான் நிதர்சனமான உண்மை.

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனுஷ்கா சர்மா. இவரது நடிப்பில் உருவான Rab Ne Bana Di Jodi என்ற படம் முதல் முதலாக திரைக்கு வந்தது. பிகே, என்.ஹெச்10, சுல்தான், ஏ தில் ஹே முஷ்கி, பாரி, சஞ்சு, ஜீரோ என்று பல படங்களில் நடித்துள்ளார். Bulbbul என்ற படத்தை தயாரித்துள்ளார். தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான Clean Slate Filmz (க்ளீன் ஸ்லேட் பிலிம்ஸ்) என்ற நிறுவனத்தின் மூலமாக இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

இந்தியா பிளேயிங் 11 எப்படி? யார் யாருக்கெல்லாம் அணியில் இடம் கிடைக்கும்? ஏன்?

ஆனால், அதன் பிறகு கடந்த 5 ஆண்டுகளில் ஒரு படங்களில் கூட நடிக்கவில்லை. ஆனாலும் கோடிகளில் புரளுகிறார். அனுஷ்கா சர்மா கோடிக்கணக்கான மதிப்புள்ள சொகுசு கார்களும், சொகுசு வீடுகளும் வைத்திருக்கிறார். இவரது நிகர சொத்து மதிப்பு மட்டும் ரூ.250 முதல் ரூ.300 கோடி ஆகும். அனுஷ்கா சர்மா ஒரு படத்திற்கு ரூ.10 முதல் ரூ.12 கோடி வரையில் சம்பளம் வாங்குகிறார் என்று சொல்லப்படுகிறது. சினிமா தவிர பிராண்ட் ஒப்பந்தம் மூலமாகவும் வருமானம் ஈட்டி வருகிறார். ஒரு விளம்பரத்திற்கு ரூ.3 கோடி வரையில் வருமானம் பெறுகிறார்.

கிரிக்கெட்டை மாறுபட்ட கோணத்தில் காட்டிய ஐபிஎல் 16 ஆண்டுகள் நிறைவு – ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

க்ளீன் ஸ்லேட் பிலிம்ஸ் என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக என் ஹெச் 10, பில்லாரி, பாரி, புல்புல் என்ற படத்தை தயாரித்துள்ளார். பல நிறுவனங்களில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடும் செய்திருக்கிறார். அனுஷ்கா சர்மா தனது கணவர் விராட் கோலியுடன் இணைந்து மும்பையில் ரூ.34 கோடி மதிப்பில் ஆடம்பர சொகுசு வீடும், குர்கானில் ரூ.80 கோடி மதிப்பில் ஒரு சொகுசு வீடும் வாங்கியிருக்கின்றனர்.

இது தவிர அலிபாக்கில் ரூ.19 கோடி மதிப்பில் ஒரு பண்ணை வீட்டையும் வாங்கியிருக்கின்றனர். மேலும், பிரபல பின்னணி பாடகர் கிஷோர் குமாரின் முன்னாள் வீடு உள்பட விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவிடம் ஆடம்பரமான சொத்துக்கள் ஏராளமாக உள்ளன. இந்த ஜோடியிடம் Audi R8, Audi A8 L, Audi Q8, Audi Q7, Audi RS 5, Audi S5, Range Rover Vogue, Bentley Flying Spur மற்றும் Bentley Continental GT என்று ஏராளமான சொகுசு கார்கள் உள்ளது. அனுஷ்கா சர்மாவிடம் ரூ.300 கோடி சொத்து இருக்கிறது என்றால், விராட் கோலியிடம் ரூ.1050 கோடி வரையில் சொத்துக்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

KIYG 2024 Medal Tally: 12 தங்கம், 3 வெள்ளி, 16 வெண்கலத்துடன் தமிழ்நாடு 2ஆவது இடத்திற்கு சரிவு!

இந்திய மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனையான ஜூலான் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அனுஷ்கா சர்மா நடித்துள்ளார். சக்தா எக்ஸ்பிரஸ் என்ற டைட்டிலில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், எப்போது வெளியாகும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்தப் படம் இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!