நீங்கள் எந்தப்பக்கம் தேர்வு செய்வீர்கள்? அர்ஜுன் தாஸ் & காளிதாஸ் நடித்துள்ள 'போர்'! ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Published : Jan 24, 2024, 01:53 PM IST
நீங்கள் எந்தப்பக்கம் தேர்வு செய்வீர்கள்? அர்ஜுன் தாஸ் & காளிதாஸ் நடித்துள்ள 'போர்'! ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

சுருக்கம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களான காளிதாஸ் மற்றும் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள 'போர்' படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.  

தொடர்ந்து தமிழில் தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும், அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'போர்'. இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில்,  உருவாகி வரும் இந்த படம்  இருமொழிப் படமாக உருவாகியுள்ளது.

இதில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இந்திப்பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாழ்வின் தார்மீக சிக்கல்கள் மற்றும் மனித இயல்புகளை இரண்டாக பிரிக்கும் விதத்தில், தற்போது 'போர்', படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

நடுங்க வைக்கும் குளிர்.. No மேக்கப் லுக்கில் ரம்யா பாண்டியன் வெளியிட்ட போட்டோஸ்! எங்க போய் இருக்காங்க தெரியுமா

இனி தினேஷுடன் சேர வாய்ப்பே இல்லை... இரண்டாவது திருமணத்திற்கு தயாரான ரச்சித்தா! மாப்பிள்ளை யார் தெரியுமா?

இந்த போஸ்டர், விஷுவலாக இரண்டு போஸ்டர்கள் போன்று, பாதி பாதியாக பிரிந்துள்ளது. இதிலிருந்து பார்வையாளர்களை  ஒரு பக்கத்தை தேர்ந்தெடுக்கச் சொல்லும், வித்தியாசமான சவாலைத் தருகிறது இந்த  ஃபர்ஸ்ட் லுக். 'போர்',  திரைப்படம் கதை சொல்லலின் எல்லைகளைத் மாற்றியமைத்து, நமக்கு ஒரு வித்தியாசமான, பரபரப்பான அனுபவத்தை தரும் படைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். பார்வையாளர்கள் தங்கள் நம்பிக்கைகளை எதிர்கொள்வதற்கும், தேர்வு செய்வதற்கும் ஒரு காட்சி அழைப்பாக இந்த போஸ்டர் செயல்படுகிறது. இதிலிருந்து ஒரு பக்கத்தைத் தேர்ந்தெடுக்க நீங்கள் தயாரா?. விரைவில் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மிருணாள் தாகூருடன் டும்..டும்..டும்... தேதி குறித்த குடும்பம்... தனுஷின் புதுப்புது அர்த்தங்கள்..!
தமன்னாவின் ‘புருஷன்’ விஷால்... தூள் பறக்கும் சுந்தர் சி பட புரோமோ