சிம்பிளாக நடந்த வளைகாப்பு.. கணவரோடு ஜோராக ஒரு குட்டி நடனம் - நடிகை ஸ்ரீதேவி அசோக்கின் Celebration Video!

Ansgar R |  
Published : Jan 23, 2024, 11:58 PM IST
சிம்பிளாக நடந்த வளைகாப்பு.. கணவரோடு ஜோராக ஒரு குட்டி நடனம் - நடிகை ஸ்ரீதேவி அசோக்கின் Celebration Video!

சுருக்கம்

Actress Sridevi Ashok : பிரபல சீரியல் மற்றும் வெள்ளித்திரை நடிகை ஸ்ரீதேவி அசோக்கிற்கு வளைகாப்பு நடந்துள்ளது. அந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளப்பாக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

சென்னையில் பிறந்து வளர்ந்து இங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை படித்து முடித்தவர் தான் பிரபல நடிகை ஸ்ரீதேவி அசோக். கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான நடிகர் தனுஷின் "புதுக்கோட்டையிலிருந்து சரவணன்" என்கின்ற திரைப்படத்தில் செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனது கலை உலக பயணத்தை இவர் துவங்கினார். 

அதன் பிறகு 2006 ஆம் ஆண்டு வெளியான "கிழக்கு கடற்கரைச் சாலை" என்கின்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு இவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தமிழ் மொழியில் பிரபலமாக உள்ள அனைத்து முன்னணி சேனல்களிலும் ஒளிபரப்பாகும் பல நாடகங்களில் நடித்து மிகவும் பெரிய அளவில் புகழ்பெற்றுள்ளார் ஸ்ரீதேவி. 

மொத்தம் 13 நாமினேஷன்ஸ்.. அசத்தும் கிறிஸ்டோபர் நோலனின் Oppenheimer திரைப்படம் - Oscar 2024 Nominations List!

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிபரப்பான "செல்லமடி நீ எனக்கு" என்கின்ற நாடகத்தில் இவர் நடிக்க துவங்கினார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான "இளவரசி", "தங்கம்", "சிவசங்கரி", மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பான "அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்", விஜய் டிவியில் ஒளிபரப்பான "கல்யாணம் முதல் காதல் வரை" என்று இன்றளவும் தொடர்ச்சியாக பல சீரியல்களில் நடித்து வருகிறார். 

இவர் சில வருடங்களுக்கு முன்பு அசோக் சிந்தாளா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் இரண்டாவது முறை கர்ப்பம் தரித்துள்ள நடிகை ஸ்ரீதேவி அசோக் அவர்களுக்கு அவரது ஐந்தாம் மாத வளைகாப்பு நிகழ்ச்சி தற்பொழுது நடைபெற்றுள்ளது. தனது கணவரோடு இணைந்து அவர் நடனமாடும் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அம்மாவை விட உயரமா வளர்ந்துட்டாங்களே.. அழகிலும் அப்படியே மம்மி தான் - மகள்கள், மகன் மற்றும் கணவரோடு ரம்பா!

PREV
click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
துண்ட காணோம், துணிய காணோம் என்று தெரிச்சு ஓடிய வில்லன்ஸ்- அசால்ட்டா ரிவெஞ்ச் எடுத்த கார்த்திக்!