Actor Nanjil Vijayan : சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் ராமர் கோவில் திறப்பு குறித்து பேசியுள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக நேற்று ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் ஆனது திறக்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறையும் விடுக்கப்பட்டு மிக பிரம்மாண்டமான முறையில் ராமர் கோவில் சிறப்பான நடைபெற்றது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் என்று பல்வேறு துறையை சார்ந்த பிரபலங்களும் நேரில் கலந்து கொண்டனர்.
பாரதப் பிரதமர் மோடி அவர்களுடைய தலைமையில் நேற்று ஜனவரி 22 ஆம் தேதி காலை ராமர் கோவில் திறக்கப்பட்டது. தொடர்ச்சியாக பல லட்சம் பக்தர்கள் அங்கு வந்து ராமரை தரிசித்து செல்கின்றனர். நேற்று ஹெலிகாப்டர் மூலம் ராமர் கோவிலின் மேல் மலர்கள் தூவப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராமர் கோயில் திறப்பு குறித்து ஒரு பரபரப்பு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் பிரபல சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் அவர்கள்.
ராமர் கோயில் தற்போது திறக்கப்பட்டுள்ளது, ஜெய் ஸ்ரீ ராம் முழக்கங்கள் எங்கு பார்த்தாலும் ஒலிக்கின்றது. ஆனால் இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நிலை நிறுத்தும் ஒரு நாடாக திகழ்கிறது. இங்கு அனைவரும் ஜாதி மத பேதம் இன்றி பழகுகின்றனர். இஸ்லாமியர்கள் வீட்டில் ரம்ஜான் கொண்டாடும் பொழுது, ஹிந்துக்களின் வீட்டுக்கு பிரியாணி செல்கின்றது.
ஹிந்துக்களின் அனைத்து பண்டிகையின் போதும் இஸ்லாமியர்கள் வீட்டுக்கு பலகாரங்கள் செல்கின்றது. இங்கு இந்துக்களும், முஸ்லிம்களும் உறவினர்களாக பழகி வருகின்றனர். இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது பெருமகிழ்ச்சி அளிக்கும் அதே நேரம், அங்கு பாபர் மசூதிக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் பிரம்மாண்டமாக ஒரு பாபர் மசூதி கட்டினால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கூறி ஜெய் ஹிந்த் என்று சொல்லி தன் உரையை முடித்து இருக்கிறார் நடிகர் நாஞ்சில் விஜயன்.