வேற லெவலில் மேக் ஓவர் செய்து ஸ்ருதி ஹாசன் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
தமிழ், தெலுங்கு, பாலிவுட் என தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ஸ்ருதிஹாசன். உலக நாயகன் கமலஹாசனின் மகளான இவர் முன்னணி நாயகியாவதற்கான போட்டியில் உள்ளார். லண்டனில் பிரபல பாப் பாடகியாக வலம் வந்த ஸ்ருதிஹாசன். கமலஹாசனின் ஹே ராம் படத்தில் வல்லபாய் படேலின் மகளாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் வெளியானது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியிருந்த ஸ்ருதிஹாசன்,. அதை அடுத்து பாலிவுட்டில் லக்கி என்னும் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகி இருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...தனுஷ்..நித்யாமேனனாக மாறிய ஜப்பான் ஜோடி... வைரலாகும் மேகம் கருக்காத பாடல்
பின்னர் தெலுங்கு, இந்தி மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வந்த இவர் தமிழில் ஏழாம் அறிவு மூலம் என்ட்ரி கொடுத்தார். மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் நாயகியாக தோன்றி படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதோடு சிறந்த பெண் அறிமுகத்திற்கான விருதையும் தட்டி சென்றார் ஸ்ருதிஹாசன்.
மேலும் செய்திகளுக்கு...வெள்ளை நிற புடவையில் சொக்க வைக்கும் ராஷ்மிகா மந்தனா..க்யூட் போட்டோஸ் இதோ !
பின்னர் தமிழ் தெலுங்கு என அடுத்தடுத்து கமிட் ஆகி வந்த இவர் தனுஷ், சூர்யா, விஜய் என முன்னணி நாயகர்களுக்கு ஜோடியானது மூலம் அறியப்பட்ட நாயகிகளில் ஒருவரானார். இருந்தும் இவருக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் தெலுங்கு, பாலிவுட் என தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்த ஸ்ருதிஹாசன் கடந்த 2017க்கு பிறகு சொந்த காரணங்களால் படங்களில் இருந்து ஒதுங்கியிருந்தார். இறுதியாக விஜய் சேதுபதி நடித்த லாபம் படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...தீண்டாமையை நிராகரிக்காதது கல்வியா? புதிய விளக்கம் தந்த நீயா? நானா? கோபிநாத்
தற்போது மூன்று தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள இவர் தனது காதலருடன் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில் தற்போது வேற லெவலில் மேக் ஓவர் செய்து இவர் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.