ஜப்பானை சேர்ந்த இருவர் இந்த பாடலுக்கு அழகாக நடனமாடி ரீல்ஸ் செய்திருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்தவர்கள் ஜப்பானில் உள்ள தனுஷ் நித்தியாமேனன் என புகழ்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்த படம் திருச்சிற்றம்பலம். இந்த படம் விரைவில் 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இடம் பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 94 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து விட்டதாம் திருச்சிற்றம்பலம். முன்னதாக தனுஷின் யாரடி நீ மோகினி படத்தை இயக்கியிருந்த மித்ரன் ஜஹவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பாக்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தங்க மகனுக்கு பிறகு திருச்சிற்றம்பலத்தில் தனுஷ் - அனிருத் கூட்டணி அமைந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த கம்போஅமைவதால் இந்த கூட்டணி குறித்து அதிக எதிர்பார்ப்பும் நிலவியது.போலீஸ் அதிகாரியின் மகனான நாயகன் தனது படிப்பை முடிக்காமல் உணவு டெலிவரி செய்யும் பாயாக வேலை செய்கிறார். இதனால் தந்தைக்கு மகன் மீது அதீத கோபம். அவ்வப்போது இருவரும் மோதிக் கொள்வதும் பின்னர் தந்தையின் பாசத்தை புரிந்து கொண்ட மகன் சமாதானம் ஆவதுமான சென்டிமென்ட்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மூன்று நாய்களில் எவரை நாயகன் கைப்பிடிப்பார் என்கிற சுவாரசிய காதல் கதையும் இந்த படத்தில் அதிகமாகவே இருந்தது. அதோடு பாரதிராஜாவின் நடிப்பு படத்தில் வெகுவான பாராட்டுகளை பெற்றிருந்தது.
மேலும் செய்திகளுக்கு...வெள்ளை நிற புடவையில் சொக்க வைக்கும் ராஷ்மிகா மந்தனா..க்யூட் போட்டோஸ் இதோ !
மேலும் செய்திகளுக்கு...தீண்டாமையை நிராகரிக்காதது கல்வியா? புதிய விளக்கம் தந்த நீயா? நானா? கோபிநாத்
முன்னதாக படத்தில் இருந்து வெளியான தேன்மொழி, மேகம் கருக்காத உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. நீண்ட நாள் இடைவெளிக்கு பின் அனிருத் - தனுஷ் கூட்டணியில் அமைந்த இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். அதோடு அதிக அளவில் ரில்ஸ் செய்யப்பட்டது. அந்த வகையில் தற்போது ஜப்பானை சேர்ந்த இருவர் இந்த பாடலுக்கு அழகாக நடனமாடி ரீல்ஸ் செய்திருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்தவர்கள் ஜப்பானில் உள்ள தனுஷ் நித்தியாமேனன் என புகழ்ந்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு...இரண்டாவது திருமணத்திற்கு தயாரான கோபி..ராதிகா போட்ட கிடுக்கு பிடி..பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்