இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு இப்படி ஒரு நிலையா? தீராத மனக்கஷ்டத்துக்கு காரணம் இந்த ஒரு படம் தான்.!

By manimegalai a  |  First Published Sep 6, 2022, 1:51 PM IST

பிரபல இயக்குனரும், நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார், தற்போது அந்த ஒரு படத்தை நினைத்து மனக்கஷ்டத்தில் புலம்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 


பல வெற்றிப்படங்களை இயக்கிய, இயக்குனர் விக்ரமனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய கே.எஸ்.ரவிக்குமார் 1990 ஆம் ஆண்டு வெளியான 'புரியாத புதிர்' படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, 'சேரன் பாண்டியன்', 'புத்தம் புது பயணம்', 'ஊர் மரியாதை', 'பொண்டாட்டி ராஜ்ஜியம்', 'சூரியன் சந்திரன்' போன்ற படங்களை இயக்கினார். இவர் இயக்கிய படங்கள் அனைத்திற்கும் தொடர்ந்து ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக இவர் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளியான நாட்டாமை திரைப்படம், இன்று முதல் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு வரும் படமாக உள்ளது. இந்த படத்திற்காக சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில விருது, சிறந்த இயக்குனருக்கான தமிழக அரசு திரைப்பட விருது போன்றவற்றை பெற்றார்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகள்: ரஜினியை வைத்து திட்டம் போடும் அரசியல் கட்சிகள் ..! ரசிகர்களுக்காக தலைவர் எடுத்த அதிரடி முடிவு..!

அதே போல் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மற்றும் நடிகர் கமலஹாசன், அஜித் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக நடிகர் சரத்குமாரை மட்டும் வைத்து, சுமார் 12 படங்கள் இயக்கி உள்ளார். இவர் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய, முத்து, படையப்பா ஆகிய திரைப்படங்கள் சுமார் 100 நாட்களுக்கு மேல், திரையரங்கில் ஓடி வசூலை வாரி குவித்தது. ரஜினிகாந்தின் 'படையப்பா'  படத்திற்காக,  சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில அரசின் விருதை பெற்றார்.

மேலும் கமலை வைத்து இவர் இயக்கிய 'தெனாலி', 'பஞ்சதந்திரம்', 'தசாவதாரம்' போன்ற படங்கள் வேறு லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டது. இவர் இயக்கிய பல படங்கள் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி, வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று, தயாரிப்பாளருக்கு லாபத்தை பெற்று தந்த படங்களாகவே உள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கடைசியாக இயக்கிய திரைப்படம் என்றால் அது 'லிங்கா' பிரமாண்ட பொருட்செலவில், முன்னணி அனுஷ்கா மற்றும் சோனாக்க்ஷி சின்ஹா நடிப்பில் வெளியான இந்த படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வெளியான போதிலும், படு தோல்வியை சந்தித்தது.

மேலும் செய்திகள்: பளபளக்கும்... மினுமினுக்கும் 'சொப்பன சுந்தரி' ஆக மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!
 

சமீப காலமாக தமிழ் படங்கள் இயக்குவதை விட தெலுங்கு படங்கள் தான் இயக்கி வருகிறார். பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து, நடித்திருந்த 'கூகுள் குட்டப்பன்' என்கிற திரைப்படம் கடந்த மே மாதம் வெளியான நிலையில், நல்ல கதை மற்றும் திறமையான நடிப்பை நடிகர்கள் வெளிப்படுத்தி பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்ற போதிலும், ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்காமல் போனது தான் கே.எஸ்.ரவிக்குமார் மனக்கஷ்டத்திற்கு காரணம்.

குறைவான பட்ஜெட்டில், நல்ல கதையை எடுத்தால் கூட ரசிகர்கள் பெரிய நடிகர்கள் படம் என்றால் மட்டுமே திரையரங்கிற்கு வருவதாகவும், இல்லை என்றால் ஓடிடியில் வெளியாகும்போது படத்தை பார்த்து கொள்ளலாம் என நினைப்பது தான் பல படங்கள் வரவேற்பை பெறாமல் போவதற்கு காரணம். இந்த நிலை மாற வேண்டும். என தன்னுடைய ஆதங்கத்தை நெருங்கிய வட்டாரத்தில் வெளிப்படுத்தி புலம்பி வருகிறாராம். படத்திற்கு கிடைக்காத வரவேற்பால் ஏமாற்றம் அடைந்தாலும்... ஓடிடி மற்றும் சாட்டலைட் உரிமை லாபகரமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்த கே.எஸ்.ரவிகுமாருக்கா... இந்த நிலை? 

click me!