இரண்டாவது திருமணத்திற்கு தயாரான கோபி..ராதிகா போட்ட கிடுக்கு பிடி..பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

By Kanmani P  |  First Published Sep 6, 2022, 12:36 PM IST

ராதிகா தன்னை திருமணம் செய்து கொள்ள ஒரு சத்தியம் செய்து தர வேண்டும் எனக் கூறுகிறார்.


பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடருக்கு பட்டிதொட்டி எல்லாம் ரசிகர்கள் உண்டு. இல்லத்தரசிகளை வெகுவாக ஈர்த்துவிட்ட இந்த தொடர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பத் தலைவி தனது கணவனை பகைத்துக் கொண்டு எவ்வாறு தன் குடும்பத்தை நேர்த்தியாக நடத்துகிறாள் என்பது குறித்தான கதைக்களத்தை கொண்டுள்ளது. கடந்த எபிசோடுகளில் பாக்கியலட்சுமி கணவரான கோபி அவரது முன்னாள் காதலியை கரம் பிடிப்பதற்காக பாக்கியலட்சுமிக்கு துரோகம் செய்கிறார். இதை அறிந்து கொண்ட பாக்கியலட்சுமி தன் கணவரை விவாகரத்து செய்வதோடு குடும்பத்தை தானே பார்த்துக் கொள்வதாகவும் கூறுகிறார்.

பாக்கியலட்சுமியின் இந்த முடிவிற்கு மூன்று பிள்ளைகளில் ஒருவரான எழில் மட்டும் உறுதுணையாக இருக்க மற்ற இரு பிள்ளைகளும் அவருக்கு எதிராக இருக்கிறார். அதோடு அவரது மாமியார் அவ்வப்போது பேச்சின் மூலம் ஊசி வைத்து குத்திக் கொண்டே இருக்க, வெளியில் சென்ற கோபியோ மீண்டும் தனது முன்னாள் காதலியை சரிகட்டும் வேலையில் இறங்குகிறார். அதோடு அவ்வப்போது தன் மகளையும் பள்ளிக்கூடத்திற்கு சென்று பிரைன் வாஸ் செய்கிறார்.  மேலும் மகள் மற்றும் ராதிகாவுடன் ஒன்றாக வசிக்க சூழ்ச்சி செய்கிறார் கோபி. இந்த முடிவிற்கு ராதிகாவின் அம்மா மற்றும் அண்ணனும் உறுதுணையாக இருக்கின்றனர்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு...யோகி பாபுவின் "ஷூ "...பாக்யராஜ் கலந்து கொண்ட பட ட்ரைலர் வெளியீட்டு விழா

நேரடியாக கோபியை அழைத்து இருவரும் பேசுகிறார்கள் அப்போது ராதிகா தன்னை திருமணம் செய்து கொள்ள ஒரு சத்தியம் செய்து தர வேண்டும் எனக் கூறுகிறார். அதாவது இன்னொரு முறை தன்னையும் தன் மகளையும் இக்கட்டான சூழ்நிலைகள் நிறுத்த மாட்டேன் என உறுதி அளிக்க வேண்டும் என கோபியிடம் கேட்கிறார். அதற்கு கோபி தன் உயிரே போனாலும் இந்த சூழ்நிலையை கொண்டு வர மாட்டேன் என உறுதியளிக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு...ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன வரலட்சுமி ...இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் கவரும் நாயகி

இதற்கிடையே பெரிய மண்டபம் ஒன்றிற்கு சாப்பாடு சப்ளை செய்யும் கான்ட்ராக்ட் குறித்த விளம்பரத்தை பார்க்கும் பாக்கியலட்சுமி அது குறித்து அப்ளை செய்ய ஜெனியிடம் கூறுகிறார். ஆனால் ஜெனியோ அது வேலைக்காகது என தெரிவிக்க கோபமடையும் பாக்கியலட்சுமி.  மகன் எழில் இருந்தால் அப்லே செய்திருப்பான் எனக் கூறுகிறார். பின்னர் ஜெனி அந்த காண்ட்ராக்டுக்காக அப்ளை செய்து கொடுக்கிறார். இனிவரும் காலங்களில் கோபி அந்த குடும்பத்தை பார்த்த அளவிற்கு தானும் சம்பாதித்து மகனுக்கு நிகரானவள் மருமகள் என நிரூபிக்க துடிக்கும் பாக்கியலட்சுமியின்  கனவு நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேலும் செய்திகளுக்கு...மறுபடியும் தப்பு செய்யும் ஆதி...பொறுக்கமுடியாமல் கன்னத்தில் அரை விட்ட ஜெசி...ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்

click me!