யோகி பாபுவின் "ஷூ "...பாக்யராஜ் கலந்து கொண்ட பட ட்ரைலர் வெளியீட்டு விழா

By Kanmani P  |  First Published Sep 6, 2022, 11:35 AM IST

 ஷூ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர்  வெளியீட்டு விழா திரையுலக முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.


துணை நடிகராக வந்து பிரபல காமெடி நடிகர் ஆக்கி தற்போது ஹீரோவாகியுள்ளார் யோகிபாபு. இவர் இல்லாமல் தமிழ் சினிமாவே கிடையாது என்கிற அளவிற்கு எக்கச்சக்க படங்களில் தோன்றி வரும் இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், கூகுள் குட்டப்பா, வீட்டில விசேஷம், யானை, பன்னிக்குட்டி, கிச்சு கிச்சு, மேதை என அனைத்து படங்களிலும் தோன்றியிருந்தார். இதில் பன்னிக்குட்டி படத்தில் நாயகனாக நடித்து அசத்தியிருந்தார் யோகி பாபு. திருமண சடங்கிற்காக ஒரு பன்னிக்குட்டியை ஒரு வாரம் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கும் நாயகன் பன்னிக்குட்டி தொலைந்ததால் படும் பாட்டை விவரிக்கும் வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றிருந்தார்.

தற்போது இவர் கைவசம் சதுரங்க வேட்டை 2, அடங்காதே, ஜகஜால கில்லாடி, அந்தகன், பிஸ்தா, காவியும் ஆவியும் நடுவுல தேவி, ஹர, பூச்சாண்டி, அயலான், காபி வித் காதல், வெள்ளை உலகம், தீயோர்க்கு அஞ்சே, சூரப்புலி, தமிழரசன், நானே வருவேன், சுந்தரா ட்ராவல்ஸ், காசேதான் கடவுளடா, தலைநகரம், வாரிசு, ஜெய்லர், மெடிக்கல் மிராக்கள்,  பூமரங் என எக்கச்சக்க படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு... ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன வரலட்சுமி ...இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் கவரும் நாயகி

இதற்கிடையே தற்போது ஷூ என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார் யோகி பாபு.   கார்த்திக், நியாஸ் மற்றும் ஏ டி எம் ப்ரொடக்சன் ஸ்ரீ மதுராஜி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை கல்யாண் இயக்கியுள்ளார். இதற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். திரில்லர் காமெடி படமாக உருவாகியுள்ள இதில் முக்கிய வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர்  வெளியீட்டு விழா திரையுலக முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 

மேலும் செய்திகளுக்கு...மறுபடியும் தப்பு செய்யும் ஆதி...பொறுக்கமுடியாமல் கன்னத்தில் அரை விட்ட ஜெசி...ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்

வெளியீட்டு விழா குறித்து தயாரிப்பாளர் நியாஸ் கூறும்போது, தமிழ் திரைத்துறையில் நல்ல உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் ஷூ படத்தை தயாரித்து உள்ளதாகவும். கல்யாண் போன்ற நம்பி கூறியவர்கள் படத்தை எங்களுக்காக உருவாக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எதிர்காலத்தில். நல்ல திரைப்படங்களை தயாரிப்போம் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம் என தெரிவித்திருந்தார். 

அதேபோல தயாரிப்பாளர் கார்த்தி பேசுகையில் இது எங்களின் முதல் தயாரிப்பு குழந்தைகளை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது படத்திற்காக இயக்குனர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டும் என கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..சமந்தாவிற்கு இனிமேல் பின்னணி குரல் கொடுக்க மாட்டேன்...அடம்பிடிக்கும் பிரபல பாடகி

அதேபோல படத்தின் நாயகி சஞ்சிதா செட்டி பேசுகையில், இந்த படத்தின் தலைப்பு ஷூ என்றாலும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வலுவான மற்றும் தீவிரமான உள்ளடக்கத்தை கொண்டுள்ளது. குழந்தை கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் சமூகத்திற்கு மிகவும் முக்கிய செய்தியை கூறும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மாபெரும் வெற்றியடைய ஒட்டுமொத்த பட குழுவும் எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். 

இந்த படத்திலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் கே.பாக்யராஜ் பேசுகையில் புதிய தயாரிப்பாளர்கள் வருவதை பார்ப்பது சிமகிழ்ச்சியாக உள்ளது.  யோகி பாபுவின் படங்களுக்கு பெரும் வரவேற்பும் குவிந்து வருகிறது. முக்கிய தொழில்நுட்ப வல்லுனர்களை வைத்து இந்த படத்தை உருவாக்கியது மிகப்பெரிய பலம் படம் நன்றாக வந்திருக்கிறது என்று உறுதியான நம்பிக்கையை தருகிறது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என தெரிவித்திருந்தார்.

click me!