Samantha: இந்த துணிச்சல் யாருக்கு வரும்? வெளிநாட்டு படத்தில் சர்ச்சை கதாபாத்திரத்திற்கு ஓகே சொன்ன சமந்தா!

Published : Nov 26, 2021, 01:17 PM IST
Samantha: இந்த துணிச்சல் யாருக்கு வரும்? வெளிநாட்டு படத்தில் சர்ச்சை கதாபாத்திரத்திற்கு ஓகே சொன்ன சமந்தா!

சுருக்கம்

நடிகை சமந்தா (Samantha) தனது முதல் வெளிநாட்டு படமான 'அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ்' படத்தில் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். இதில் யாரும் எதிர்பாராத மிகவும் துணிச்சனால கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

நடிகை சமந்தா தனது முதல் வெளிநாட்டு படமான அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ் படத்தில் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். இதில் யாரும் எதிர்பாராத மிகவும் துணிச்சனால கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா, தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்த பின்னர் அவரது கேரியர் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஏற்கனவே பாலிவுட் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ள இவர், தற்போது வெளிநாட்டுப் படம் ஒன்றிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ், என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம், இந்திய எழுத்தாளர் டைமெரி என் முராரி எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட உள்ளது. ஒரு துப்பறியும் நிறுவனத்தை நடத்தும், இருபால் தமிழ் பெண்ணாக சமந்தா மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

மேலும் செய்திகள்: Maanaadu Box Office: பிரச்சனைகளை பொடிபொடியாக்கி வெளியான 'மாநாடு'..! முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா?

 

காதலித்து திருமண செய்த வாழ்க்கையில் சமந்தா இந்த ஆண்டு தோல்வியை சந்தித்தாலும், திரை துறையில் யாராலும் ஒளித்துவைக்க முடியாத வைரம் போல் ஜொலிக்கிறார். தெலுங்கு, தமிழ், இந்தி, என தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க கூடிய சிறந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வரும் சமந்தா, அந்த வகையில், இப்போது, முதன்முறையாக வெளிநாட்டு படமான 'அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ்' படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் செய்திகள்: Keerthy Suresh: இதுவரை காட்டாத தூக்கலான கிளாமர்! நைட் ட்ரெஸ்ஸோடு கண்ணடித்து கிக் ஏற்றும் கீர்த்தி சுரேஷ்!

 

இது குறித்து நடிகை சமந்தா தன்னுடைய ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது...  "ஒரு புதிய உலகம். அன்பின் ஏற்பாட்டின் ஒரு பகுதியாக இருப்பதில் முற்றிலும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை அனுவாகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி பிலிப்ஜான். இந்த அற்புதமான பயணத்தைத் தொடங்க காத்திருக்க முடியாது.. நன்றி என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்: நாயகி சீரியல் வித்யா பிரதீபுக்கு திருமணம் ஆகிடுச்சா? மாலையும் கழுத்துமா... தாலியோடு ஷாக் கொடுக்குறாங்களே!

 

சிங்கப்பூரை சேர்ந்த மேஜிக் ஹவர் ஃபிலிம்ஸின், சமீர் சர்க்கார் இந்தப் படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்ற உள்ளார். 'டவுன்டவுன் அபே' மற்றும் 'தி குட் கர்மா ஹாஸ்பிடல்' ஆகிய படங்களை இயக்கிய, பாஃப்டா விருது பெற்ற, இயக்குனர் பிலிப் ஜான் இப்படத்தை இயக்குகிறார். அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ் படத்தை Sunitha Tati's  குரு பிலிம்ஸ் தயாரிக்கிறது. சுனிதா இதற்கு முன் சமந்தாவுடன் 'ஓ பேபி' திரைப்படத்தில் இணைந்து பணியாட்டிரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!