Maanaadu Movie Review: தொடர் பிரச்சனைக்கு பின் வெளியான 'மாநாடு'... ரசிகர்கள் மனதை வென்றதா? விமர்சனம்..!

By manimegalai aFirst Published Nov 25, 2021, 9:57 PM IST
Highlights

பிரச்சனை இல்லாம சிம்பு படம் வந்துடுமா? என கடைசி நேரத்தில் கூட ரிலீஸ் தேதி மாற்றப்படும் சூழல் வந்தும், ஒருவழியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் 'மாநாடு'. ரசிகர்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானாலும்... 'மாநாடு' ரசிகர்கள் மனதில் இடம் பிடித்ததா? இல்லையா என்பதை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

பிரச்சனை இல்லாம சிம்பு படம் வந்துடுமா? என கடைசி நேரத்தில் கூட ரிலீஸ் தேதி மாற்றப்படும் சூழல் வந்தும், ஒருவழியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் 'மாநாடு'. ரசிகர்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானாலும்... 'மாநாடு' ரசிகர்கள் மனதில் இடம் பிடித்ததா? இல்லையா என்பதை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு முதல் முறையாக சிம்புவை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் தான் 'மாநாடு'. வில்லனாக எஸ்.ஜே. சூர்யா, ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர் என பலர்  இந்த 'மாநாட்டில்' சங்கமித்துள்ளனர்.

கதை சுருக்கம்:

கோயம்புத்தூரில் நடக்கும் தன்னுடைய நண்பனின் திருமணத்திற்கு துபாயில் இருந்து பறந்து வருகிறார்  சிம்பு. விமானத்தில் வரும் போது தான்... டைம் லூப்பில் சிக்கிக் கொள்கிறார். மிகப்பெரிய 'மாநாடு' நடக்கறது, அதில் முதல்வரை சுட்டு கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார் சிம்பு. ஏன் சுடுகிறார்? அதற்க்கு பின்னால் யார் உள்ளார்கள் என ஏகப்பட்ட குழப்பங்கள் சூழ்ந்திருந்தாலும், எதனால் இப்படி நடக்கிறது என்பதை சிம்பு எப்படி கண்டுபிடித்து, முதல்வரை கொலை செய்யப்படுவதையும் நிறுத்தி... தன்னையும் எப்படி காப்பாற்றி கொள்கிறார் என்பதே மீதி கதை.

இதற்க்கு முன்  பல டைம் லூப் படங்கள் பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளது. இவ்வளவு ஏன் கடந்த வாரம் கூட 'ஜாங்கோ' என்கிற டைம் லூப் திரைப்படம் வெளியானது. ஆனால் யாரும் யூகிக்க முடியாத சில விஷயங்களை படத்தின் உள்ளே கொண்டு வந்து, முதல் பகுதியை விட இரண்டாவது பகுதியில் சுவாரஸ்யம் சேர்த்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

ஆரம்பத்தில் விறுவிறுப்பில்லாமல் செல்லும் காட்சிகள் சலிப்படைய செய்வது தான் இந்த படத்தின் மைனஸ். ஆனால் கதைக்குள் செல்லச் செல்ல படம் சூடு பிடிக்கிறது. சம்பந்தமில்லாமல் சில விஷயங்கள் படத்தில் இருந்தாலும் அது பெரிதாக கதை களத்தை பாதிக்கவில்லை.

வெங்கட் பிரபு பாணியில் சில நகைச்சுவை காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது வேற லெவல்... கை தட்டல்களையும், அள்ளுகிறது குறிப்பாக ''அவன் உன்ன விட ஓவர் ஆக்டிங் பண்ணுவான்'' என்று சிம்பு சொல்லும் வசனத்துக்கு அரங்கம் அதிர்கிறது.

சிம்பு மற்றும் எஸ்.ஜே .சூர்யாவை சுற்றி தான் இந்த படத்தின் ஒட்டு மொத்த கதையும் நகர்கிறது. இருவரும் சமமான கோட்டில் நின்று படத்தை சரிய விடாமல் பிடித்துள்ளனர். வில்ல நடிப்பில் சும்மா எஸ்.ஜே.சூர்யா கதகளி ஆடியுள்ளார்.

அரசியல்வாதியாக வரும் ஒய்.ஜி.மகேந்திரன்.எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு அரசியல் வாதியாக தங்களுடைய நடிப்பை நேர்த்தியாக நடித்துள்ளனர். அதே போல் கல்யாணி ப்ரியதர்ஷன் வழக்கமான நாயகியாக வந்து செல்கிறார். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது போல் அண்ணன் படத்தில் தம்பி பிரேம்ஜியும் நடித்துள்ளார். கூடுதலாக கருணாகரனும் , மனோஜ் பாரதிராஜா, சுப்பு பஞ்சு, வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தில் ஒரே ஒரு பாடல் தான் என்றாலும், பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் யுவன். இந்த படத்தின் கதை களத்தை உணர்ந்து நச்சுனு பொருந்தும் உடல் தோற்றத்திற்கு மாறி நடித்திருக்கும் சிம்புவுக்கு இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுத்துள்ளது என்றே கூறலாம். சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும், அதையெல்லாம் வெங்கட் பிரபு படத்தில் கண்டு கொள்ள கூடாது என்கிற மைண்ட் செட்டில் மன திருப்தியோடு திரையரங்கை விட்டு அனுப்பி வைக்கிறது மாநாடு.

click me!