Shriya Saran: வழுக்கி விழுந்த ஸ்ரேயா..! வீடியோ எடுத்தபோது நேர்ந்த விபரீதம்..!

Published : Nov 25, 2021, 03:05 PM IST
Shriya Saran: வழுக்கி விழுந்த ஸ்ரேயா..!  வீடியோ எடுத்தபோது நேர்ந்த விபரீதம்..!

சுருக்கம்

இளம் தாயான நடிகை ஸ்ரேயா அவ்வப்போது, தன்னுடைய தாய்மை குறித்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இவர் வீடியோ எடுத்து கொண்டிருக்கும் போதே வழுக்கி விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இளம் தாயான நடிகை ஸ்ரேயா அவ்வப்போது, தன்னுடைய தாய்மை குறித்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இவர் வீடியோ எடுத்து கொண்டிருக்கும் போதே வழுக்கி விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழி திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ், விஜய், விக்ரம், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும், மிகவும் ரகசியமாக தன்னுடைய காதலர் Andrei Koscheev என்கிற ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை பெற்றோர் சம்மதத்துடன், கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா, காதல் கணவருடன் ஸ்பெயின் நாட்டில் வசித்து வருகிறார். மேலும் இவரது கைவசம் தற்போது 4 தெலுங்கு திரைப்படம் மற்றும் ஒரு ஹிந்தி படம் உள்ளது. அதே போல் அவ்வப்போது தன்னுடைய கணவருடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு சிங்கிள்சை வெறுப்பேற்றி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஸ்ரேயா, முதல் முறையாக தனக்கு கொரோனா லாக் டவுன் சமயத்தில் தான் குழந்தை பெற்றதாகவும், குழந்தை பிறந்து 6 மாதத்திற்கு மேல் ஆகிறது என, வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.

இதை தொடர்ந்து நடிகை ஸ்ரேயாவுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். குழந்தைக்கு ராதா என்று பெயர் வைத்துள்ள இவர், அவ்வப்போது தன்னுடைய குழந்தியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தன்னுடைய தாய்மை அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

அப்படி வீடியோ ஒன்றை எடுத்து கொண்டே... இவர் பேசிய போது, திடீர் என கீழே வழுக்கி விழுந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. செல்போன் வீடியோக்களில் தங்களை பற்றி பேசி, பகிர்ந்து கொள்வது தவறில்லை, அதே நேரத்தில் சற்று கூடுதல் கவனமாகவும் இருக்க வேண்டும் என, பலர் ஸ்ரேயாவுக்கு தங்களுடைய அறிவுரையை கூறி வருகிறார்கள்.

"

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?