
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நடன இயக்குனர் சிவசங்கரின் சிகிச்சைக்கான தொகையை செலுத்துவதாக நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.
நடன இயக்குநர் சிவசங்கர் கோவிட்-19 நோயால் மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளார். 72 வயதான அவரின் சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் அவரது குடும்பத்தினர் சிரமப்படுகின்றனர். உதவிக்கான வேண்டுகோளை தென்னிந்திய திரைப்படத் துறையின் ஆலோசகரான வம்சி காக்கா ட்வீட் செய்தார். அதில், "நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு தற்போது ஆபத்தான நிலையில் உள்ளார். விலையுயர்ந்த சிகிச்சையின் காரணமாக குடும்பத்தால் பில்களை செலுத்த முடியவில்லை. தயவுசெய்து உதவுங்கள்" எனக் கூறி சிவசங்கரின் மகன் அஜய் கிருஷ்ணாவின் தொடர்பு விவரங்களை அவர் சேர்த்துள்ளார்.
சில மணிநேரங்களுக்குப் பிறகு சோனு சூடிடமிருந்து ஒரு பதில் வந்தது. "நான் ஏற்கனவே சிவசங்கர் மாஸ்அர் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கிறேன். அவரது உயிரைக் காப்பாற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
சிவசங்கர் தென்னிந்திய திரையுலகில் முக்கியமானவர். சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். மகதீரா, விஸ்வ துளசி, திருடா திருடி, பாகுபலி போன்ற திரைப்படங்கள் அவரது நடன அமைப்பில் அடங்கும். சிவசங்கர் மாஸ்டர் நடிகராக பல படங்களில் நடித்துள்ளார். அதில் அவர் நடித்த மற்றும் நடனம் அமைத்த வரலாறு உட்பட பல படங்கள் உள்ளன.
தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்கள் மற்றும் பாலிவுட் திட்டங்களில் நடிப்பு நடித்துள்ள சோனு சூட், கோவிட்-19 நெருக்கடி காலங்களில் நிவாரணங்களை பலருக்கும் வழங்கி வருகிறார். அதற்காக அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த ஆண்டு, சோனுசூட் ₹ 20 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்ததாகக் குற்றம் சாட்டி வருமான வரித் துறையின் சோதனைகளுக்கு இலக்கானார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.