Devoleena Bhattacharjee: டியூஷன் டீச்சர் தவறாக நடந்து கொண்டார்..! பிரபல நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

Published : Nov 24, 2021, 06:37 PM IST
Devoleena Bhattacharjee: டியூஷன் டீச்சர் தவறாக நடந்து கொண்டார்..!  பிரபல நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

சுருக்கம்

தேவோலீனா பட்டாச்சார்ஜி (Devoleena Bhattacharjee) தனது டியூஷன் டீச்சர் தவறாக நடந்து கொண்டதாக கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தேவோலீனா பட்டாச்சார்ஜி தனது டியூஷன் டீச்சர் தவறாக நடந்து கொண்டதாக கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை தேவ்லீனா பட்டாச்சார்ஜி, சமீபத்தில் தனது சிறுவயதில் கணித டியூஷன் ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது காவல் துறையிடம் சென்று புகார் அளிக்க விரும்பியதாகவும், ஆனால், பெற்றோர் அதற்க்கு மறுப்பு தெரிவித்ததால், அதை தான் செய்ய முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்: Aditi Shankar: வெள்ளை நிற சல்வாரில்.. டார்க் லிப்ஸ்டிக் போட்டு... தன்னை தானே வைரம் என வர்ணித்த அதிதி ஷங்கர்!

 

ஃபிளிப்கார்ட்டின் லேடீஸ் Vs ஜென்டில்மென் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, தேவலீனா இந்த சம்பவம் குறித்து முதல் முறையாக பேசினார். "அவர் கணிதம் கற்று தருவதில் சிறந்த ஆசிரியர் என்பதால், எல்லோரும் அவரிடம் டியூஷனுக்குச் செல்வார்கள். என்னுடைய இரண்டு நண்பர்களும் அவரிடம் டியூஷனுக்குச் சென்றனர். எனவே நானும் அவரிடம் டியூஷன் பணிக்க சென்ற போது, அவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: Mansoor Ali Khan: நடிகன் என்பதால் இப்படியா? பரிதாபமாக போன உயிர்.. நீதிமன்ற அனுமதியை ஏற்க மறுத்த நடிகர்!

 

இதுகுறித்து ஆசிரியரின் மனைவியிடம் புகார் தெரிவித்ததாகவும், அதே நேரத்தில் நேரத்தில் சில கடுமையான நடவடிக்கை எடுக்க விரும்பியதாகும் கூறியுள்ளார். இது குறித்து பெற்றோரிடமும் கூறியதாகவும், பின்னர் அந்த டியூஷனுக்கு நான் செல்வதை நிறுத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். தன்னுடைய நண்பர்களும் ஒருவர் பின் ஒருவராக அவரிடம் படிக்க செல்வதை நிறுத்தி கொண்டனர் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்: Tamannaah: கருப்பு நிற உடையில் ஹாட் அம்மனாக மாறி... சாப்பாட்டை பொளந்து கட்டும் நடிகை தமன்னா! வைரல் போட்டோஸ்!

 

போலீசுக்கு போனால், சமூகம் என்ன நினைக்கும் என்பதற்காகவே யாரும் அவரை பற்றி பெரிதாக பேசவில்லை. தன்னுடைய வீட்டில் கூட அப்படி தான் நினைத்தனர் என தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 'மீடூ' மூலம், பல நடிகைகள் இது போன்ற புகார்களை கொடுத்துள்ள நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, நடிகை இந்த பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!