Atrangi Re Trailer Release: ஆரம்பத்திலேயே காதை மூட வச்சிட்டாங்களே? தனுஷ் - அக்ஷய் இருவரை காதலிக்கும் நாயகி!

By manimegalai aFirst Published Nov 24, 2021, 5:44 PM IST
Highlights

தமிழ் சினிமாவில் தனக்கென நிலையான இடத்தை பிடித்த பின்னர், பாலிவுட், ஹாலிவுட் என கலக்க துவங்கியுள்ள நடிகர் தனுஷ் இந்தியில் நடித்துள்ள இரண்டாவது படமான 'அட்ராங்கி ரே ' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தனக்கென நிலையான இடத்தை பிடித்த பின்னர், பாலிவுட், ஹாலிவுட் என கலக்க துவங்கியுள்ள நடிகர் தனுஷ் இந்தியில் நடித்துள்ள இரண்டாவது படமான 'அட்ராங்கி ரே ' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

ஏற்கனவே நடிகை சோனம் கபூருக்கு ஜோடியாக தனுஷ், கடந்த 2013 ஆண்டு Raanjhanaa படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து, தமிழில் கவனம் செலுத்த துவங்கிய இவர், இரண்டு ஹாலிவுட் படங்களிலும் நடித்து முடித்து விட்டார். இந்நிலையில், அக்ஷய் குமார் மற்றும் சாரா அலிகானுடன் இணைந்து இவர் நடித்து வந்த, 'அட்ராங்கி ரே' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: Aditi Shankar: வெள்ளை நிற சல்வாரில்.. டார்க் லிப்ஸ்டிக் போட்டு... தன்னை தானே வைரம் என வர்ணித்த அதிதி ஷங்கர்!

 

கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, டெல்லி, ஆக்ரா பகுதிகளில் நடைபெற்றது. கொரோனா பரவலால் கடந்த ஆண்டு தடைபட்ட இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நடந்து முடிந்துள்ளது. மேலும், படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கும் தயாராகவுள்ளது. ஆனால், மீண்டும் அதிகமான கொரோனா அச்சுறுத்தலால் திட்டமிட்டபடி இந்த படம் வெளியாகாவில்லை.

மேலும் செய்திகள்: Mansoor Ali Khan: நடிகன் என்பதால் இப்படியா? பரிதாபமாக போன உயிர்.. நீதிமன்ற அனுமதியை ஏற்க மறுத்த நடிகர்!

தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டாலும் பல்வேறு பெரிய படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருவதால், தனுஷ் நடித்துள்ள 'அத்ரங்கி ரே' திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தயரிப்பு நிறுவனம் சமீபத்தில் தெரிவித்தது. அதன் படி disney+ hotstar ஓடிடி தளத்தில் இப்படம் 24-ம் தேதி  கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்: Tamannaah: கருப்பு நிற உடையில் ஹாட் அம்மனாக மாறி... சாப்பாட்டை பொளந்து கட்டும் நடிகை தமன்னா! வைரல் போட்டோஸ்!

 

தற்போது வெளியாகியுள்ள ட்ரைலரை வைத்து பார்க்கையில்... தனுஷ் தமிழ் பையனாகவே நடித்துள்ளார். ட்ரைலரின் ஆரம்பத்திலேயே சாக்கில் கட்டி கொண்டு வந்து இவரை அடிக்கும் சிலரை, தமிழில் கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்து காதை மூட வைத்துள்ளார். பின்னர் சோடா கடை நடத்தி வரும், சாரா அலிகானை திருமணம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. ஹிந்திக்கார பெண்ணான இவரை சமாளிக்க தனுஷ் போராடுவதும், கூடவே மேஜிக் கலைஞரான அக்ஷய் குமார் உள்ளே வருகிறார். சாரா அலிகானுக்கு அக்ஷய் குமாரையும் பிடித்து போக... இந்த கதை அதிக காமெடியுடனும், கொஞ்சம் சென்டிமெண்டுடனும் நகர்கிறது. சாரா அலிகான் கடைசியில் யாருடன் வாழ முடிவு செய்கிறார் என்பதே இந்த படத்தின் கதை என்பது தெரிகிறது.

தற்போது வெளியாகியுள்ள படத்தின் ட்ரைலர் இதோ...

 

click me!