Naga Chaitanya: சமந்தாவை விவாகரத்து செய்த நாக சைதன்யாவுக்கு கேர்ள் ஃபிரெண்டான பிரபல தமிழ் நடிகை

Ganesh A   | Asianet News
Published : Nov 24, 2021, 04:33 PM ISTUpdated : Nov 24, 2021, 04:44 PM IST
Naga Chaitanya: சமந்தாவை விவாகரத்து செய்த நாக சைதன்யாவுக்கு கேர்ள் ஃபிரெண்டான பிரபல தமிழ் நடிகை

சுருக்கம்

தமிழில் குருதி ஆட்டம், இந்தியன் 2, பத்து தல, பொம்மை, யானை, ருத்ரன், ஹாஸ்டல், திருச்சிற்றம்பலம் என அரை டஜனுக்கு மேலான படங்களை கைவசம் வைத்துள்ளார் பிரியா பவானி சங்கர்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. இவரும் நடிகை சமந்தாவும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை அண்மையில் முடிவுக்கு வந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர்.

விவாகரத்துக்கு பின் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் நாக சைதன்யா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான லவ் ஸ்டோரி திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், வெப் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் நாக சைதன்யா. இந்த வெப் தொடரை சூர்யாவின் 24 படத்தை இயக்கி விக்ரம் குமார் இயக்க உள்ளார். இந்த வெப் தொடரில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக பிரபல தமிழ் நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளாராம். அவர் இதில் நாக சைதன்யாவின் கேர்ள் ஃபிரண்டாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தமிழில் குருதி ஆட்டம், இந்தியன் 2, பத்து தல, பொம்மை, யானை, ருத்ரன், ஹாஸ்டல், திருச்சிற்றம்பலம் என அரை டஜன்களுக்கு மேலான படங்களை கைவசம் வைத்துள்ள பிரியா பவானி சங்கர், தெலுங்கில் நடிக்கும் முதல் வெப் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிக்பாஸ் ஜூலியுடன் முதல் முறையாகக் கைகோர்த்த வருங்கால கணவர்: வைரல் கிளிக்ஸ்!
மருமகன் மீது கொலை முயற்சி புகார்: 'கார்த்திகை தீபம் சீரியல் கார்த்திக் அதிரடி கைது!