
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை முதலில் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டனர். அப்போது ரஜினியின் அண்ணாத்த படம் ரிலீசான காரணத்தால், நவம்பர் 25-ந் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தனர். இதற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வந்தன.
படம் நாளை வெளியாக இருந்த நிலையில், தற்போது படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு படத்தின் ரிலீஸ் தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது|: “நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதன் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
சுரேஷ் காமாட்சியின் இந்த திடீர் அறிவிப்பு சிம்பு ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. கடந்த 3 மணிநேரத்துக்கு முன்னர் வரை மாநாடு படம் நாளை ரிலீசாக உள்ளதாக குறிப்பிட்டு படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டது. ‘இந்த 3 மணிநேரத்தில் தான் எதோ நடந்திருக்கிறது... என்ன நடந்ததுனு சொல்லுங்க’ என சுரேஷ் காமாட்சியிடம் சிம்பு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.