12 விருதுகளுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ள சமந்தாவின் 'தி ஃபேமிலிமேன் 2' வெப் சீரிஸ்!!

Published : Nov 13, 2021, 05:26 PM IST
12 விருதுகளுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ள சமந்தாவின் 'தி ஃபேமிலிமேன் 2' வெப் சீரிஸ்!!

சுருக்கம்

நடிகை சமந்தா நடிப்பில் வெளியான முதல் ஹிந்தி மொழி வெப் சீரிஸானா 'தி ஃபேமிலி மேன் 2' தற்போது 12 பிரிவுகளின் கீழ் பிலிம் ஃபேர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  

நடிகை சமந்தா நடிப்பில் வெளியான முதல் ஹிந்தி மொழி வெப் சீரிஸானா 'தி ஃபேமிலி மேன் 2' தற்போது 12 பிரிவுகளின் கீழ் பிலிம் ஃபேர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அமேசான் ஓடிடியில் தளத்தில் கடந்த ஜூன் 4 ஆம் தேதி வெளியான 'தி ஃபேமிலிமேன் 2 ' வெப் சீரிஸின் ட்ரைலர் வெளியான போதே தமிழக அரசியல் வாதிகள் பலர், தொடர்ந்து தங்களது எதிர்ப்பு தெரிவித்தனர். அதே போல் இந்த தொடரை தடை செய்யவேண்டும் என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், அவர்களுக்கு கோரிக்கை வைத்ததுடன், தமிழக அரசும் இந்த தொடரை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இப்படி ஒரு பக்கம் கடுமையாக எதிர்ப்புகளுடன்  'தி ஃபேமிலிமேன் 2 ' வெப் தொடர் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் சில எதிர்மறையான கருத்துக்களை பெற்றாலும்,  மறுபுறம் திரை உலக பிரமுகர்கள் மற்றும் பிரபலங்களிடம் இருந்து சமந்தாவின் நடிப்புக்கு மட்டும் இன்றி, ஒட்டு மொத்த குழுவின் உழைப்பு, மற்றும் மற்ற நடிகர்களின் நடிப்பும் வெகுவாக பாராட்ட பட்டது.  ஏற்கனவே இந்த தொடரில் நடித்துள்ள சமந்தாவின் நடிப்பை பிரபலங்கள் பலர் பாராட்டிய நிலையில் தற்போது,  நடிகை சமந்தாவின் பெயர் சிறந்த நடிகைக்கான பட்டியலில் ஃபிலிம் பேர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ராஜி என்ற கதாபாத்திரத்தில் சமந்தா இந்த வெப் சீரிஸில் நடித்திருந்தார். அதே போல் சமந்தா இந்த வெப் தொடருக்காக, டூப் போடாமல் நடித்த சண்டை காட்சியின் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாக நடிகை கீர்த்தி சுரேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், லாவண்யா திரிபாதி, ராஷ்மிகா மந்தனா, உள்ளிட்ட பல பிரபலங்கள் ஆச்சர்யத்தோடு அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 'தி ஃபேமிலி மேன்' வெப் தொடர், சிறந்த சீரிஸ், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த ஒரிஜினல் ஸ்டோரி, சிறந்த குணசித்ர நடிகை,  உள்பட 12 விருதுகளுக்கு  நாமினேஷன் செய்யப்பட்டுள்ளது. இதில் சமந்தாவின் பெயர் சிறந்த நடிகைக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்காக சமந்தாவிற்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: Poonam Bajwa: படு மோசமான பிகினி உடையில் கவர்ச்சியில் உச்சம் தொட்ட பூனம் பஜ்வா! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

மேலும் செய்திகள்: Jai Bhim: 'ஜெய் பீம்' மற்றும் 'திரௌபதி'.. அடங்கி போகச்சொன்ன திருமா! தூண்டிவிடும் அன்புமணி! அதிர வைத்த ட்வீட்!!

மேலும் செய்திகள்: Dushara: 'சார்பட்டா பரம்பரை' மாரியம்மாவா இது? பட்டனை கழட்டி விட்டு படு மோசமான கவர்ச்சியில்.. படுக்கையறை போஸ்!

மேலும் செய்திகள்: துளியும் மேக்கப் இல்லாமல்.. தூங்கி எழுந்த முகத்தோடு கையில் காபியுடன் கீர்த்தி சுரேஷ் கொடுத்த கவர்ச்சி தரிசனம்!

மேலும் செய்திகள்: Raashii Khanna: ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு ... சேலையில் சைடு போஸ் கொடுத்த ராஷி கண்ணா! கிக் ஏற்றும் ஹாட் போஸ்!

 

 

 

 

 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Top 10 Tamil Serial : சன் டிவி, விஜய் டிவிக்கு போட்டியாக TRP ரேஸில் குதித்த ஜீ தமிழ் சீரியல்... இந்த வார டாப் 10 லிஸ்ட் இதோ
Con City Review : அடிபொலியாக இருந்ததா அர்ஜுன் தாஸின் கான் சிட்டி - முழு விமர்சனம் இதோ