Raashii Khanna: ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு ... சேலையில் சைடு போஸ் கொடுத்த ராஷி கண்ணா! கிக் ஏற்றும் ஹாட் போஸ்!
நடிகை ராஷி கண்ணா (Rashi Khanna), இளம் ரசிகர்களை கவரும் விதமாக தொடர்ந்து, விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது வெள்ளை நிற சேலையில் அழகு பொங்கும் புதிய புகைப்படங்களை வெளியிட்டு கிக் ஏற செய்துள்ளார்.
நடிகை ராஷி கண்ணாவிற்கு அறிமுக திரைப்படம் ஹிந்தியில் என்றாலும், இவருக்கு நடிகை என்கிற அட்ரஸ் கொடுத்தது, தெலுங்கு திரைப்படங்கள் தான்.
ஹிந்தி பட வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு இவருக்கு கை கொடுக்காததால், தேடி வந்த தெலுங்கு பட வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டார்.
நடிகர் நாகர்ஜுனா, நாக சைதன்யா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'மனம்' திரைப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்து, அடுத்தடுத்து தெலுங்கு திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க துவங்கினார்.
பின்னர், மலையாளம், தமிழ் போன்ற மொழிகளிலும் இவருடைய கவனம் சென்றது. தமிழில் நடிகை நயன்தாரா - விஜய் சேதுபதி நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்தார்.
முதல் படத்திலேயே தன்னுடைய அழகால், தமிழ் ரசிகர்கள் மனத்தில் இடம் பிடித்த இவருக்கு அடுத்தடுத்த தமிழ் பட வாய்ப்புகளும் குவிய துவங்கியது. அந்த வகையில் தற்போது, ராஷி கண்ணா தனுஷுக்கு ஜோடியாக 'திருச்சிற்றம்பலம்' உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார்.
பட வாய்ப்புகளுக்காக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு வரும், ராஷி கண்ணா தற்போது வெள்ளை நிற சேலையில் செம்ம ஸ்டைலிஷாக கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.
எப்போதும் விதவிதமான மாடர்ன் உடைகளில் புகைப்படம் வெளியிடும் ராஷி கண்ணா... இந்த முறை ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.