
பாலிவுட்டின் பிரபல நடிகையாக இருந்து வருபவர் கங்கனா ரனாவத். பெண் முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரங்களில் தேர்வு செய்து நடித்து வரும் இவர் இதுவரையில் நான்கு முறை சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார். முத்தாய்ப்பாய் 2020வுக்கான சிறந்த சேவை மற்றும் சாதனைகளை செய்தவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் உயரிய விருதான பத்மஸ்ரீ விருவதை கங்கனா ரனாவத் பெற்றிருந்தார்.
பாலிவூட் படங்களான ரங்கோன், தாம் தூம், கிரிஷ் 3, குயின், மணிகர்ணிகா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் மணிகர்ணிகா கங்கனா ரனாவத்தை வீரமிகு பெண்ணாக கட்டியிருந்தது. இதன் தொடர்ச்சியாக இவர் தமிழக இரும்பு பெண்மணியான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தலைவி படத்தில் நடித்திருந்தார். ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவான இந்த படத்தை விஷ்ணு வர்தன் இந்தூரி, ஷைலேஷ் ஆர் சிங், பிருந்தா பிரசாத் ஆகியோர் தயாரித்திருந்தனர். அரவிந்த் சாமி முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த படம் கடந்த செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டிருந்தது. முன்னதாக சென்னை வந்த கங்கனா ரனாவத் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார்.
நடிப்பால் மட்டுமல்ல சர்ச்சை உள்ளாகும் கருத்துக்களை பதிவிடுவதன் மூலமும் பிரபலமாவர் கங்கனா. மகாராஷ்டிராவின் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசைக் கடுமையாக விமர்சித்தார். அதன்காரணமாக, அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தநிலையில் அவருக்கு இசட்ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் சமூக வலைத்தளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கங்கனா ரனாவத் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார். அந்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கங்கனா; அடுத்து வரும் 5 வருடங்களில் தான் மனைவியாகவும், தாயாகவும் இருக்க விரும்புவதாக தெரிவித்திட்டுள்ளார். அதோடு புதிய இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையில் தீவிரமாகப் பங்கேற்கும் ஒருவரையே மணக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். மனா வாழ்க்கையில் பங்கெடுக்க போகும் நபர் குறித்து கேட்டதற்கு விரைவில் உங்களுக்கு தெரிய வரும் என கங்கனா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.