#Maanaadu ; விரைவில் தணிக்கைக்கு தயாராகும் மாநாடு ; நவம்பர் இறுதியில் திரை காணும் சிம்பு படம்!!

Kanmani P   | Asianet News
Published : Nov 13, 2021, 03:02 PM IST
#Maanaadu ; விரைவில் தணிக்கைக்கு தயாராகும் மாநாடு ; நவம்பர் இறுதியில் திரை காணும் சிம்பு படம்!!

சுருக்கம்

நீண்ட நாள் இழுபறிக்கு பிறகு உருவாகியுள்ள மாநாடு அடுத்த வாரம் தணிக்கைக்காக திரையிட உள்ளது என  தகவல் வெளியாகியுள்ளது.  

சிம்புவின் கால்ஷீட் பிரச்சனையால் நீண்ட நாட்கள் தடைபட்ட படப்பிடிப்பால் கடுப்பான தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு படத்தை கைவிடுவதாக அறிவித்திருந்தார். பின்னர் முக்கிய புள்ளிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு மாநாடு மீண்டும் துவங்கியது. திரையுலகிற்கு வந்த நாளிலிருந்து முதல் முறையாக ஈஸ்வரன் படபிடிப்பில் மட்டுமே குறித்த நேரத்த சிம்பு கலந்து கொண்டுள்ளார் என சொல்லப்பட்ட நிலையில், அதன் தொடர்சியாக மாநாடு படத்தின் படப்பிடிப்பையும் முறையாக முடித்து கொடுத்துள்ளார் சிம்பு.  

பொலிட்டிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படம் ஒரு வழியாக திரையிட தயாராகியுள்ளது. மாநாடு படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே சூர்யா, பிரேம்ஜி, மனோஜ் பாரதிராஜா, கருணாகரன், எஸ்.ஏ சந்திரசேகர், உதய உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கான ஒளிப்பதிவை ரிச்சர்ட் எம்.நாதன் கவனித்து வருகிறார்.

இந்த படத்தை இந்த வருட தீபாவளிக்கு வெளியிட படக்குழு  திட்டமிட்டிருந்த நிலையில் நினைத்தபடி படம் ஆகவில்லை. இதனால் கடுப்பான சிம்புவின் தயார் இது மைக்கேல் ராயப்பன் மற்றும் பலரது சதி, தீபாவளிக்கு மாநாடு வெளியாகவில்லை என்றால் முதல்வர் வீட்டு முன் உண்ணாவிரம் இருப்பேன் என சிம்புவின் தாயார் போராட்டத்தில் குதித்திருந்தார்.

ஆனாலும் அண்ணாத்த,எனிமி என இரண்டு படங்கள் தீபாவளியை முன்னிட்டு திரை கண்டா காரணத்தால் மாநாடு படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி வைப்பட்டது.  வரும் நவம்பர் 25-ம் தேதி மாநாடு திரை காணும் என சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார். அதோடு இந்த படம் படத்தின் விநியோக உரிமையை எஸ்எஸ்ஐ புரொடக்ஷன்ஸ் வாங்கியுள்ளது.  அனைத்து ஏரியாக்களும் விற்பனையாகிவிட்ட மாநாடு படம் இன்னும் தணிக்கை செய்யப்படவில்லை. அடுத்த வாரமே படத்தை தணிக்கைக்குழுவுக்கு திரையிட உள்ளனர் என தகவல் கசிந்துள்ளது.. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

'கையெடுத்து கும்புடுறேன்;இப்படி செய்யாதீர்கள்' - ஸ்ரீலீலா மனம் திறந்து வேண்டுகோள்!
9-ல் 8 படங்கள் தோல்வி.. பான் இந்தியா ஸ்டார் தான் கடைசி நம்பிக்கை!