ரமேஷின் தற்கொலையில் சந்தேகம் என புகார்! இது தான் மரணத்திற்காக உண்மை காரணமா... வெளியான பகீர் தகவல்!

Published : Jan 28, 2023, 05:33 PM IST
ரமேஷின் தற்கொலையில் சந்தேகம் என புகார்! இது தான் மரணத்திற்காக உண்மை காரணமா... வெளியான பகீர் தகவல்!

சுருக்கம்

மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட டிக் டாக் டான்சர் ரமேஷின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் அருகே உள்ள அல்லிகுளம் மோர் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமியின் மகனான 42 வயதுடைய டான்ஸ் ரமேஷ்.  சிறுவயதில் இருந்து  சினிமாவை பார்த்து நடனத்தை கற்று  கொண்டு மேடை  நடன நிகழ்ச்சியில் கலந்து நடனமாடி வந்துள்ளார். அப்போது இவருடன் 11வயதில் நடனமாடிய  சித்தரவுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர்.

13 வயதில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 25 வயதுடைய ஜெனிபர் , 22 வயதுடைய சானோபர் என இரு மகள் உள்ளனர். அவ்வபோது அல்லி குளம் பகுதியில் கணவன் மனைவி இருவரும் நடனமாடி  சமூக வலைத்தளங்களில் பரவவிட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு வெகு விரைவில் பிரபலமானார் ரமேஷ். பின்னர்  அஜித் நடிப்பில் துணிவு, ரஜினி காந்த் நடித்த ஜெயிலர், படத்தில் சிறு வேடத்தில் நடன காட்சிகளில் ரமேஷ் நடித்து வந்துள்ளார்.

நடு இரவில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரம்.. தாடி பாலாஜி மனைவி நித்யா செய்த மோசமான செயல்! கைது செய்த போலீஸ்!

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கன்னப்ப திடல் மோர் மார்க்கெட் பகுதியைச் இன்பவள்ளி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டடு மனைவிக்கு தெரியாமல் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த விஷயம் மனைவி சித்ராவிக்கு தெரிய வரவே கணவன் மனைவி இருவரும் சண்டையிட்டுள்ளனர். சித்ராவின் உறவினர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு இன்பவள்ளியை தாக்கி உள்ளனர்.

இதனையடுத்து இன்பவள்ளியிடம் தொடர்ப்பு இல்லாமல் ரமேஷ் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இதனை அடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மனைவியை பிரிந்து புளியந்தோப்பு கே. பி. பார்க் பகுதியில் வசித்து வரும் இன்பவள்ளியுடன்  ரமேஷ் வாழ்ந்து வந்துள்ளார்.  நேற்று ரமேஷ் பிறந்தநாளை முன்னிட்டு   இன்பவள்ளியிடம் மது குடிப்பதற்கு  500பணம் கேட்டதாகவும் பணம் கொடுக்க மறுத்ததால் விரக்தியில் கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் 10வது மாடியில் இருந்து ரமேஷ்  கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

AK 62: 'ஏகே 62' படத்தில் இருந்து அதிரடியாக விலகும் விக்னேஷ் சிவன்! ஏன்வெளியான பரபரப்பு காரணம்?

இதுகுறித்து இன்பவள்ளி, சித்ராவிடம் ரமேஷ் கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டாதாவும் தெரிவித்தார். சம்பவம் குறித்து பேசின் பிரிட்ஜ் போலீசார் விரைந்து சென்று ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சித்ராவின் அக்கா அமுல் ராணி கூறும் போது நேற்று மாலை கே. பி. பார்க் குடியிருப்புக்கு  4 பேர் வந்துள்ளனர்

அப்போது டான்ஸ் மாஸ்டர் ரமேஷ் எங்கே இருக்கிறார் என்று கேட்டு அவரிடம் நடனம் கற்றுக்கொள்ள  வந்ததாகவும் கூறுவதாக தெரிவித்தனர். ஆனால் ரமேஷ் கீழே விழுந்து இறந்த பிறகு அந்த நான்கு பேரை காணவில்லை என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ரமேஷ் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அமுலு ராணி கூறியுள்ளார். ரமேஷ் என் இறப்பு சந்தேகத்துக்கிடமாக இருப்பதாக கூறியதால், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக இருந்த ரமேஷின் சடலம், தலை பகுதி மற்றும் உடல் பகுதியில் ஸ்கேன் செய்யப்பட்டு தானாக மேலிருந்து விழுந்தாரா அல்லது யாரேனும் தள்ளிவிடப்பட்டார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.

ஜாக்கெட் போடாமல் சேலை கட்டி... பாரதி ராஜா பட ஹீரோயின் லுக்கில் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்! ஹாட் போட்டோஸ்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!