பல முன்னணி நடிகர்களுக்கு தெலுங்கில் டப்பிங் பேசியுள்ள, டப்பிங் கலைஞர் சீனிவாச மூர்த்தி மாரடைப்பால் மரணமடைந்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல டப்பிங் கலைஞர் மற்றும் டப்பிங் கலைஞர் சங்கத்தின் பொருளாளருமான சீனிவாச மூர்த்தி இன்று காலை திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு வயது 50.
சீனிவாச மூர்த்தி, அஜித், சூர்யா, மோகன் லால், விக்ரம், ஷாருக்கான் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு தெலுங்கில் டப்பிங் பேசியுள்ளார். தமிழிலும் ஏராளமான படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். சென்னை, வளசரவாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர், திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளது டப்பிங் கலைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவரது உடல் தற்போது அவரது இல்லத்தில், அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை காலை 11 மணிக்கு இறுதி ஊர்வலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சீனிவாச மூர்த்தியின் மறைவுக்கு டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.