தமிழனை துரத்தி அடிக்கும் வட இந்தியர்கள்! இது தொடர்ந்தால்? பிச்சை தான் எடுக்கணும்! மதுரை முத்து எச்சரிக்கை!

By manimegalai a  |  First Published Jan 28, 2023, 11:15 AM IST

திருப்பூரில் வட இந்தியர்கள் தமிழர் ஒருவரை தாக்கிய வீடியோவை பார்த்து, கொந்தளித்து பேசியுள்ளார் பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனான மதுரை முத்து.


வட இந்தியாவில் பிழைப்பை நடத்த வழியில் இல்லாமல், தமிழகத்திற்குள் அந்த ஒரிசா, ஜார்கண்ட், பீஹார், உத்தரப்பிரதேசம், போன்ற மாநிலங்களைச் சேர்ந்த வட இந்தியர்கள், எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

குறிப்பாக, பல தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுத்து, தொழில் நகரங்களாக விளங்கும் திருப்பூர் மாவட்டத்தில் பனியன் கம்பெனிகளில், வேலை செய்யும் வட இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 50 சதவீதத்திற்கும் மேல் உள்ளதாக கூறப்படுகிறது. இப்படியே சென்றால் தமிழ்நாட்டின் உள்ளே இருக்கும் தமிழர்களுக்கே வேலையில்லாத நிலை ஏற்படும் என்பதை, எச்சரிக்கும் விதமாக வீடியோ வெளியிட்டுள்ளார் பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனாக மதுரை முத்து.

Tap to resize

Latest Videos

நடிகர் தலைவாசல் விஜய் மகளுக்கும் தமிழக கிரிக்கெட் வீரருடன் விரைவில் டும்.. டும்.. டும்! நிச்சயம் முடிந்தது!

இவரை இந்த அளவுக்கு கொந்தளிக்க செய்தது சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று தான்.  திருப்பூரில் அனுப்பர்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பனியன் கம்பெனியில், வேலை பார்க்கும் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், டீ  கடையில் ஏற்பட்ட பிரச்சனைக்காக தமிழக தொழிலாளர் ஒருவரை, கட்டை, பெல்ட், போன்றவற்றால் துரத்தி துரத்தி அடிக்கும் காட்சி சமூக வலைதளத்தில் வெளியானது.

இந்த வீடியோவை பார்த்து தான் தற்போது கொந்தளிப்போடு மதுரை முத்து பேசியுள்ளார். இவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கூறியுள்ளதாவது... திருப்பூரில் சுமார் 100 பேர் கத்தி, பெல்ட், மரக்கட்டைகளை கொண்டு நம் தமிழக இளைஞர் ஒருவரை தாக்கும் வீடியோவை பார்த்தேன். தமிழகத்திற்கு வேலை கேட்டு வந்தவர்கள் முதலில் 10% தான் இருந்தார்கள். இப்போது திருப்பூரில் மட்டும் 65% பேர் வட மாநிலத்தவர் உள்ளனர்.

'துணிவு' மற்றும் 'ஜெயிலர்' படத்தில் நடித்த டிக்டாக் பிரபலம் டான்சர் ரமேஷ் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

தமிழகத்திற்கு வந்தவர்கள் நம் தமிழக இளைஞர்களையே அடித்த துணிந்து விட்டனர். வடமாநிலத்தவர் நம்மை விரட்டி அடிக்கும் அளவிற்கு தமிழ் இளைஞர்கள் விழிப்புடன் இருக்கிறீர்கள்.  பாலாபிஷேகம் செய்யும் நமக்கே, இன்னும் கொஞ்ச நாளில் வடமாநிலத்தவர் பால் ஊற்ற போகிறான். நம் ஊரில் செட்டியார் தெரு, கவுண்டர் தெரு, தேவர் தெரு இருப்பது போல் வடக்கன் தெரு என வரும் என கோபமாக கூறியுள்ளார்.

சாவித்ரிக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கிய மறைந்த நடிகை ஜமுனா! வெளியான சொத்து விவரம்..!

 தமிழக இளைஞரை விரட்டி அடிக்கும் காட்சியை பார்க்கும் போது மிகவும் சங்கடமாக இருக்கிறது. நம்மால் இரண்டு நாட்கள் வட இந்தியாவில் இந்தி தெரியாமல் தாங்க முடியாது. அவர்கள் இங்கு வந்து நம்மையே விரட்டி அடிக்கும் அளவிற்கு நாம் அசால்டாக இருக்கிறோம். தமிழ் இளைஞர்கள் விழிப்புணர்வோடும் கவனத்தோடும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என மதுரை முத்து கூறி வருகிறார். இந்த இந்த வீடியோவுக்கு தொடர்ந்து பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

click me!