பத்ம விருதை திருப்பி கொடுத்து மன்னிப்பு கேட்க தயார்! என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் சவால் விடும் கங்கனா!

By manimegalai aFirst Published Nov 14, 2021, 12:08 PM IST
Highlights

இந்திய நாட்டிற்காக, பல்வேறு போராட்டங்கள் செய்து, ரத்தம் சிந்தி, உயிர் நீத்து வாங்கிய சுதந்திரத்தை அவமதிப்பது போல், கங்கனா வெளியிட்ட கருத்துக்கு பலத்த கண்டனங்கள் எழுந்து வருகிறது. அவருக்கு அளிக்கப்பட்ட பத்ம விருதை-யும் திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வரும் நிலையில், கங்கனா (Kangana) தன்னுடைய விருதை திருப்பி கொடுப்பதாகவும், அதற்க்கு முன் தான் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என சவால் விடுவது போல் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய நாட்டிற்காக, பல்வேறு போராட்டங்கள் செய்து, ரத்தம் சிந்தி, உயிர் நீத்து வாங்கிய சுதந்திரத்தை அவமதிப்பது போல், கங்கனா வெளியிட்ட கருத்துக்கு பலத்த கண்டனங்கள் எழுந்து வருகிறது. அவருக்கு அளிக்கப்பட்ட பத்ம விருதை-யும் திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வரும் நிலையில், கங்கனா தன்னுடைய விருதை திருப்பி கொடுப்பதாகவும், அதற்க்கு முன் தான் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என சவால் விடுவது போல் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்: Sanchana Natarajan: 'சார்பட்டா' சஞ்சனா கிளாமர் போட்டோஸ்...!!

தமிழில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமான 'தலைவி' படத்தில் நடித்திருந்தவர் கங்கனா ரனாவத். இந்த படத்திற்காக உடல் எடையை கூட்டியும், குறைத்தும் நடித்ததற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் பாராட்டுக்கள் குவித்தாலும், இவருடைய அந்த கதாபாத்திரத்திற்கு உயிரோட்டம் கொடுக்க வில்லை என்பதே தமிழ் ரசிகர்கள் பலரின் கருத்தாக இருந்தது.

பாலிவுட் நடிகையான இவர், அவ்வப்போது நடிகர், நடிகைகள் குறித்து சர்ச்சையான கருத்தை கூறுவது வழக்கமான ஒன்று தான். சமந்தாவின் விவாகரத்து விஷயத்தில் கூட, அமீர் கான் தான் இதற்க்கு காரணம் என்பது போல் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதுவரை சிறந்த நடிகைக்கான 4 முறை தேசிய விருதை பெற்றுள்ளது இவருக்கு, சமீபத்தில் பத்ம விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிலையில், தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கங்கனா... சுதந்திர போராட்ட வீரர்களை அவமதிப்பது போல் கருத்து தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. "1947 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு கொடுக்கப்பட்டது சுதந்திரம் அல்ல பிச்சை என்றும், 2014 ஆம் ஆண்டுதான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது. என்பது போல் தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனம் எழுந்தது.

மேலும் செய்திகள்: Genelia: குழந்தை பெற்ற செம்ம ஹாட்? லோ நெக் ஜாக்கெட்டில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ஜெனிலியா!

 

இவரது கருத்துக்கு பாஜகவின் முன்னணி தலைவரும் எம்.பியுமான வருண்காந்தி கங்கானாவின் அந்த குறிப்பிட்ட வீடியோ பதிவை வெளியிட்டு தன்னுடைய கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார். மேலும் சுதந்திர போராட்ட வீரர்களை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளது தேச துரோகம் இல்லையா? என்பது போல் கேள்வி எழுப்பி இருந்தார். அதே போல் இவரது பேச்சை கடுமையாக கண்டித்து ஆம்ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரித்தி சர்மா கங்கனா மீது மும்பை காவல் துறையில் புகார் அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பலர் சுதந்திர போராட்ட வீரர்களை அவமதிக்கும் வகையில் பேசிய கங்கனாவின் பத்ம விருதை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைத்து கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.  அதே போல் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் ஷர்மா அவர்களும், கங்கனா ரனாவத்துக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும் என்றும் இதுபோன்ற விருதுகளை வழங்குவதற்கு முன், எதிர்காலத்தில் இதுபோன்ற நபர்கள் தேசத்தையும் அதன் ஹீரோக்களையும் அவமதிக்காத வகையில் மன உளவியல் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் கடுமையாக சாடி உள்ளார்.

மேலும் செய்திகள்: Poonam Bajwa: படு மோசமான பிகினி உடையில் கவர்ச்சியில் உச்சம் தொட்ட பூனம் பஜ்வா! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

 

இப்படி எழும் பல்வேறு கோரிக்கைகளுக்கு மத்தியில், மத்திய அரசால் தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாகவும், ஆனால் அதற்கு முன் தன்னுடைய கேள்விகளுக்கு அவர்கள் பதில் கூற வேண்டும் என சவால் விடுவது போல் பதிவு ஒன்றை போட்டுள்ளார் கங்கனா. அப்படி பதிலளிக்கும் பட்சத்தில் மன்னிப்பு கேட்கவும் தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கங்கனா பதிவிட்டுள்ளதாவது...  "நான் அந்த நிகழ்ச்சியில் பேசிய போது மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன், சுபாஷ் சந்திரபோஸ், ராணி லக்‌ஷ்மிபாய் மற்றும் வீர் சாவர்க்கர் ஜி போன்ற தலைவர்களின் தியாகத்துடன், 1857-ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கான முதல் கூட்டுப் போராட்டம் குறித்து. 1857 ஆம் ஆண்டு நடந்த போராட்டம் பற்றி எனக்கு நன்றாக தெரியும். ஆனால் 1947-ல் எந்தப் போர் நடந்தது. 1947-ல் யாராவது போராட்டம் நடத்தியிருந்தால் சொல்லுங்கள், நான் என்னுடைய பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுத்துவிட்டு மன்னிப்பையும் கேட்கிறேன்.

மேலும் செய்திகள்: Dushara: 'சார்பட்டா பரம்பரை' மாரியம்மாவா இது? பட்டனை கழட்டி விட்டு படு மோசமான கவர்ச்சியில்.. படுக்கையறை போஸ்!

 

அதே போல் மற்றொரு பதிவில் காங்கிரஸை 'பிச்சைக்காரன்' என்று அழைத்தது தொடர்பாக ஒரு வரலாற்று புத்தகத்தின் கருத்துகளை மேற்கோள் காட்டி "நான் மட்டும் காங்கிரஸை பிச்சைக்காரன் என்று சொல்லவில்லை" என்று பதிலடி கொடுத்துள்ளார்.  மேலும், 'சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி லக்‌ஷ்மி பாய் வாழ்க்கைப் படமாக்கப்பட்ட போது 1857-ஆம் ஆண்டு போராட்டத்தைப் பற்றி நிறைய ஆராச்சிகள் செய்ததாகவும், இந்தியாவில் வலதுசாரிகளால் தேசியவாதம் வளர்ந்தது என்பதை மறுத்தால் காந்தி ஏன் பகத்சிங்கை இறக்க அனுமதித்தார், ஏன் நேதாஜி கொல்லப்பட்டார், ஏன் வெள்ளைக்காரர்களால் இந்தியா இரு நாடுகளாக பிரிக்கப்பட்டு பிரிவினைக் கோடு வரையப்பட்டது, சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, இந்தியர்கள் ஒருவரையொருவர் ஏன் கொன்றார்கள் என்பதை எனக்கு புரிய வையுங்கள். அதே போல் தன்னை பொறுத்தவரை நேதாஜி தலைமையிலான ஐஎன்ஏ-வின் சிறு கலகத்தால்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கும் என்று நம்புவதாகவும், தன்னுடைய பதிவு மூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

click me!