எந்த நடிகையும் நடித்திராத துணிச்சலான வேடத்தில் நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்! பரபரப்பை ஏற்படுத்திய ஃபர்ஸ்ட் லுக்

Published : Nov 13, 2021, 07:11 PM IST
எந்த நடிகையும் நடித்திராத துணிச்சலான வேடத்தில் நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்! பரபரப்பை ஏற்படுத்திய ஃபர்ஸ்ட் லுக்

சுருக்கம்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் (Rakul Preeth Singh) நடிப்பில், உருவாகி வரும் 'சத்ரிவாலி' (Chhatriwali ) படத்தில் காண்டம் டெஸ்டராக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.  

நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில், உருவாகி வரும் 'சத்ரிவாலி' படத்தில் காண்டம் டெஸ்டராக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

மிகவும் சவாலான வேடங்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது இந்தியின் நடித்து வரும் திரைப்படம் 'சத்ரிவாலி'. ‘RSVP’ பேனர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த பபடத்தை Tejas Desokar என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ரகுல்  ஆணுறை சோதனையாளராக வருகிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானத்தில் இருந்தே... இந்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த நிலையில், தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்: Genelia: குழந்தை பெற்ற செம்ம ஹாட்? லோ நெக் ஜாக்கெட்டில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ஜெனிலியா!

 

ரகுல் ப்ரீத் சிங், கதையின் நாயகியாக நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் தொடங்கியது. குடும்பத்தோடு அனைத்து தரப்பு ரசிகர்களும் பார்த்து மகிழும் அளவிற்கு எடுக்க பட்டு வருவதாகவும்,  இந்த படத்தில், வேலை தேடும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு எந்த வேலையும் கிடைக்காததால், ஆணுறை சோதனையாளராக வேலையில் சேர்கிறார். இப்படி பட்ட வேலை செய்கிறோம் என தெரிந்தால் நண்பர்களும், குடும்பத்தினரும் என்ன நினைப்பார்கள் என, தனது வேலையின் அடையாளத்தை மறைக்க இவர் செய்யும் விஷயங்கள் உச்ச கட்ட காமெடியாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: Poonam Bajwa: படு மோசமான பிகினி உடையில் கவர்ச்சியில் உச்சம் தொட்ட பூனம் பஜ்வா! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

 

இதுவரை யாரும் நடித்திராத ஒரு சர்ச்சையான... அதே நேரத்தில் துணிச்சலான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங், மிகவும் ஆர்வமாக இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தன்னுடைய பங்களிப்போடு நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கூட ரகுல் ப்ரீத் சிங் கையில் காண்டம் வைத்தபடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்: Dushara: 'சார்பட்டா பரம்பரை' மாரியம்மாவா இது? பட்டனை கழட்டி விட்டு படு மோசமான கவர்ச்சியில்.. படுக்கையறை போஸ்!

 

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'அயலான்' படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்தடுத்து பாலிவுட் படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்... அந்த வகையில், நடிகர் ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக 'டாக்டர் ஜி' படத்தில் நடித்துள்ளார். அனுபூதி காஷ்யப் இயக்கும் இந்தப் படத்தில், ராகுல் ‘டாக்டர் பாத்திமா' என்கிற வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்