#mahaan ; விக்ரம் 60-தும் ஓடிடியிலா? மகனுடன் முதல் முறையாக இணைந்த சியான் !!

By Kanmani PFirst Published Nov 13, 2021, 5:56 PM IST
Highlights

விக்ரம் தனது மகன் துருவ் உடன் இணைந்து நடித்துள்ள மகான் படத்தை ஓடிடியில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

பீட்சா  படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்த கார்த்திக் சுப்புராஜ் தனது முதல் படத்திலேயே நல்ல வெற்றியை பெற்றிருந்தார். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா அவார்ட் வெற்றியை குவித்தது. ஆனால் இதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான இறைவி, மெர்குரி உள்ளிட்ட படங்கள் இறங்கு முகத்தையே தந்திருந்த. பின்னர் 2019-ல் ரஜினியின் பேட்டை படத்தை இயக்கியதன் மூலம் நட்சத்திர இயக்குனராக உயர்ந்த கார்த்திக் சுப்புராஜ் 5 குறும்படங்களை கொண்ட புத்தம் புது காலை, தனுஷின் ஜகமே தந்திரம், 9 குறும்படங்களை கொண்ட நவரசா உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்தார். இந்த படங்களும் தோல்வியையே சந்தித்திருந்தன. இதையடுத்து விக்ரம் மற்றும் துருவ் விக்ரமை கொண்டு மகான் என்னும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார்.

வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இதற்கு சந்தோஷ் நாராயணன்  இசையமைத்துள்ளார். ஆதித்ய வர்மா திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு தனது இரண்டாவது படமாக தனது தந்தை விக்ரமுடன் இணைந்து மகானின் துருவ் நடித்துள்ளார்.

இந்நிலையில் விக்ரமின் 60 வது படமான இதை ஓடிடி யில் ரிலீஸ் செய்ய  லலித் குமார்முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரையரங்குகளில் வெடியிடப்பட்டு தோல்வி அடைந்த படங்கள் ஓடிடி வெளியாகி இருந்தால் கட்டாயம் லாபம் பெற்றிருக்கும் என திரையுலகில் பேசப்பட்டு வரும் நிலையில், பிரபலங்கள் பலரது படங்களும் இணையதளத்தில்  வெளியிடப்பட்டு வருகிறது.  கார்த்திக் சுப்புராஜின் முந்தைய படைப்பான ஜகமே தந்திரம் படம் ஓடிடியில் வெளியிடப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே தயாரிப்பாளர் கணிசமான வெற்றியை பெற்றுள்ளதாக பேசப்படுகிறது.

இதன் காரணமாகவே விக்ரமின் மகான் படத்தை ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிரிபார்க்கப்படும் இந்த படம்அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. இவ்வாறு பிரபலங்களின் படங்கள் இணையத்தில் வெளியாவது குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

click me!