
தமிழ் ,தெலுங்கு என பன்மொழி படங்களில் கலக்கி வரும் நடிகை சமந்தா. தமிழில் முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார். இதற்கிடையே பாலிவுட்டிலும் களமிறங்கியுள்ள சமந்தா டாப்ஸி தயாரிக்கும் பாலிவுட் படத்தில் நடிகை சமந்தா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தனது நீண்ட நாள் காதலனான நாக சைதன்யாவை திருமணம் 2017-ல் செய்து கொண்டார். ஆனால் இந்த காதல் திருமணம் நீண்ட வருடங்கள் நீடிக்கவில்லை சில நாட்களுக்கு முன்னர் இருவரும், விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தனர். அதோடு சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக நாகசைத்னயா குடும்பம் வழங்குவதாக குறியா 200 கோடி ரூபாயையும் சமந்தா வேண்டாம் என்று மருத்துள்ளதாகவும் தகவல் வெளிவந்தன. இதன் பின்னர் மனா உளைச்சலில் இருந்த சமந்தா தனது நண்பர்களுடன் ஆன்மிக சுற்றுலா செல்வதாக கூறியிருந்தார்.
சமந்தா சினிமாவில் நடிப்பதோடு, மட்டுமல்லாமல் ஏழைகளுக்கு உதவுவது, குழந்தைகளுக்கு கல்வி செலவு செய்வது போன்ற பல உதவிகளை செய்து வருகிறார். இது குறித்து மறைந்த தெலுங்கு புகழ் பவன் கல்யாண் பாராட்டியிருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே.
இந்நிலையில் சமந்தா குறித்து தெலுங்கு நடிகை தேஜஸ்வி மாதிவாடா அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. இவர் பாபு பாக பிஸி, ஐஸ் கிரீம், கமிட்மென்ட் உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அதோடு தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ; நடிகை சமந்தாவால் உதவி பெற்ற நடிகை தேஜஸ்வி மாதிவாடாய் ; சிறுவயதிலேயே தாயை இழந்து விட்ட தான் அனாதையாக வளர்ந்ததாகவும். பின்னர் சினிமாவுக்கு வந்த பிறகும் பல கஷ்டங்களை அனுபவித்ததாகவும். தெரிவித்துள்ளார்.
அதோடு திடீரென காசநோயால் தான் பாதிக்கப்பட்டதாகவும் அதற்கு சிகிச்சை மேற்கொள்ள பணம் இல்லாமல் பரிதவித்து வந்த போது இதையறிந்த நடிகை சமந்தா சிகிச்சைக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டார். அறுவை சிகிச்சைக்கு பின்னர் தற்போது தான் நலமாக இருப்பதாக கூறியுள்ள தேஜஸ்வி தன்னுடைய மறு வாழ்விற்கு சமந்தாவே முழு கரணம் என கூறியுள்ளார்.
நடிகை சமந்தாவின் விவாகரத்து குறித்து சமூக வலைத்தளங்களில் வந்த மோசமான கருத்துக்கள் சமந்தா மற்றும் அவரது ரசிகர்களை மிகுந்த மனா உளைச்சலுக்கு ஆளாக்கியிருந்த நிலையில் தற்போது பரவி வரும் இது போன்ற சமந்தா குறித்த பாசிட்டிவ் கருத்துக்கள் சமந்தா ரசிகர்களை பெருமூச்சு விட வைத்துள்ளது என்றே சொல்லலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.