சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மெகா ஹிட் அடித்த நிலையில், ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் தவிர்க்க முடியாத நடிகராக ரஜினிகாந்த் வலம் வருகிறார். 50 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான். தனது தனித்துவமான ஸ்டைல், துள்ளலான நடிப்பின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து வருகிறார். மேலும் ரஜினிகாந்தின் படங்களில் பாக்ஸ் ஆபீஸிலும் வசூலை குவித்து வருவதால் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றும் அழைக்கப்படுகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வேட்டையன் படம் வெளியானது. டி.ஜே ஞானவேல் இயக்கிய இந்த படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், துஷாரா, ராணா டகுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது. இந்த படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.250 கோடி வசூல் செய்திருந்தது.
undefined
பட்டைய கிளப்பிய பாக்ஸ் ஆபிஸ் – விடுதலை 2 முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
வேட்டையன் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படம் 2025-ம் ஆண்டு வெளியாக உள்ளது. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா அக்கினேனி, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.
இதை தொடர்ந்து ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் ஜெயிலர் 2 குறித்து ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயிலர் 2 தொடர்பான தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், தமன்னா பாட்டியா, வசந்த் ரவி, மிர்னா மேனன், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் மோகன்லால், ஷிவா ராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராஃப் போன்ற நடிகர்கள் கேமியோ ரோல்களில் நடித்திருந்தனர்.
ஹீரோயின்களையே அழகில் ஓவர் டேக் செய்யும் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் மனைவி மோனிஷா; போட்டோஸ்!
இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், படம் வசூலிலும் சாதனை படைத்தது. அதன்படி இந்த படம் உலகம் முழுவதும் ரூ.650 கோடி வசூல் செய்தது. இதனிடையே ஜெயிலர் 2 படத்தை இயக்க இருப்பதாக நெல்சன் கூறியிருந்தார். அப்போது முதலே ஜெயிலர் 2 தொடர்பான அப்டேட் வெளியான வண்ணம் உள்ளன. இந்த நிலையில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.