Pooja Hegde Leaked Thalapathy 69 Movie Shooting Spot Photos: தளபதி 69 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Pooja Hegde Leaked Thalapathy 69 Movie Shooting Spot Photos : தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவா விஜய் இப்போது சினிமாவை விட்டு வெளியேற இருக்கிறார். தன்னுடைய கடைசி படமான தளபதி69 படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். இதற்கு முன்னதாக பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் பாடல்களில் இவரது டான்ஸ் ரசிகர்களை கவர்ந்தது. ஆனால், நடிப்பில் இவருக்கு போதுமான இடம் கொடுக்கவில்லை. இப்போது 2ஆவது முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார்.
விடுதலை 2 படத்தை மறைமுகமாக தாக்கிய குணா இயக்குநர் – பார்ட் 2 படமே எடுக்க கூடாது: சந்தான பாரதி!
undefined
அஜித்தின் மாஸ் இயக்குநரான ஹெச் வினோத் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தளபதி 69 படத்தில் விஜய்யுடன் இணைந்து பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நரைன், மோனிஷா பிளெஸி, ப்ரியாமணி, வரலட்சுமி சரத்குமார், கவுதம் மேனன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும், 2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தளபதி69 படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி69 படத்திற்கு விஜய்க்கு ரூ.275 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. ஹெச் வினோத்திற்கு ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை சம்பளமாம். பூஜா ஹெக்டேஎவிற்கு ரூ.6 கோடி வரையில் சம்பளமாம். ஜீவா நடித்த முகமூடி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பூஜா ஹெக்டே தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
பட்டைய கிளப்பிய பாக்ஸ் ஆபிஸ் – விடுதலை 2 முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஆனால், எந்தப் படமும் இவருடைய கதாபாத்திரங்களை பெரிதாக எடுத்துக் காட்டவில்லை. இதனால் இவருக்கு வரும் வாய்ப்பு கூட ராஷ்மிகா மந்தனாவிற்கு சென்று விடுகிறது. குறைவான படங்களில் நடித்திருந்தாலும் ராஷ்மிகா மந்தனா இன்று கோடிக்கணக்கான் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். முகமூடி, பீஸ்ட் ஆகிய படங்களுக்கு பிறகு பூஜா ஹெக்டே நடிக்கும் 3ஆவது தமிழ் படம் இது தான். தற்போது இந்தப் படத்தின் 2ஆவது கட்ட படப்பிடிப்பு சென்னையை சுற்றிலும் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே விஜய் மற்றும் பாபி தியோல் இருவருக்கும் இடையிலான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இப்போது சென்னை கடற்கரையில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இடையிலான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இன்றுடன் தளபதி69 படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு முடிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறதாம். அதுவரையில் படக்குழுவினருக்கு ஓய்வு அளிக்கப்பட இருக்கிறதாம். இந்த நிலையில் தான் 2024 ஆம் ஆண்டின் கடைசி ஷூட் இது தான் என்று பூஜா ஹெக்டே தன்னுடைய இன்ஸ்டா ஸ்ரோரியில் பகிர்ந்துள்ளார். அதில், விஜய் மற்றும் பூஜா ஹெக்டேயின் கால்கள் இடம் பெற்றுள்ளது. சென்னை பீச்சில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.