பட்டைய கிளப்பிய பாக்ஸ் ஆபிஸ் – விடுதலை 2 முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

By Rsiva kumar  |  First Published Dec 21, 2024, 8:20 AM IST

Viduthalai Part 2 Box Office Collection Worldwide Day 1 Report : விடுதலை பார்ட் 2 படம் முதல் நாளில் எத்தனை கோடி வசூல் குவித்துள்ளது என்று இந்த தொகுப்பில் காணலாம்.


Viduthalai Part 2 Box Office Collection Worldwide Day 1 Report : தமிழ் சினிமாவில் வெற்றிகளை மட்டுமே கொடுத்து வந்த இயக்குநர் வெற்றிமாறன். இவரது படங்கள் பெரும்பாலும் விருதுகளை குவிக்கும். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் ஆகிய படங்கள் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்று குவித்தது. அந்த வகையில் இப்போது விடுதலை படத்தின் 2ஆம் பாகத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கிஷோர், அனுராக் காஷ்யப், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். விடுதலை பார்ட் 1 கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து 2ஆம் பாகத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

என்னதான் மாஸ் ஹீரோவானாலும் தனுஷ் இந்த ரோல் மட்டும் இன்னும் பண்ணல; ரசிகர்கள் வருத்தம்!

Tap to resize

Latest Videos

undefined

ஏற்கனவே விடுதலை 2 ஆம் பாகத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதே வேகத்துடன் நேற்று உலகம் முழுவதும் 1000க்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியானது. முதல் பாகத்தில் குமரேசனாக வந்த சூரியின் கதாபாத்திரம் அதிகளவில் பேசப்பட்ட நிலையில், 2ஆம் பாகத்தில் வாத்தியார் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

இதில் விஜய் சேதுபதிக்கு பக்க பலமாக மஞ்சு வாரியரின் ஆக்டிங்கிற்கு அளவே இல்லை. ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதோடு படத்திற்கு இசை இளையராஜா என்றால் படத்தை பற்றி சொல்லவா வேண்டும். இளையராஜாவே எழுதி பாடிய தினம் தினம் என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஃபேமஸ். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட படத்தைப் பற்றி இளையராஜா புகழ்ந்து பேசியிருந்தார். அதற்கு ஒரே காரணம் இயக்குநர் வெற்றிமாறன்.

பாலாவின் பிதாமகன் தான் எனக்கு மன வலிமையை கொடுத்தது – சிவகார்த்திகேயன்!

இந்த நிலையில் தான் உலகம் முழுவதும் வெளியான விடுதலை பார்ட் 1 வசூலில் புதிய சாதனையை படைத்துள்ளது. ரூ.35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட விடுதலை 2 முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.9 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.8 கோடி வசூல் அள்ளியுள்ளது. இது முதல் பாகத்தை விட அதிகம். விடுதலை பார்ட் 1 முதல் நாளில் தமிழகத்தில் ரூ.4.5 கோடி வசூல் குவித்திருந்தது. உலகம் முழுவதும் வெளியான விடுதலை 1 ரூ.48 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.

இதற்கு முன்னதாக விஜய் சேதுபதி நடிப்பில் வந்த மகாராஜா படம் முதல் நாளில் உலகம் முழுவதும் மட்டும் ரூ.6.1 கோடி வசூல் குவித்திருந்தது. இந்த சாதனையை இப்போது அவரோட விடுதலை பார்ட் 2 முறியடித்துள்ளது. மகாராஜா படத்தை மட்டுமின்றி லால் சலாம், அரண்மனை 4, கருடன், அயலான், ரதன்ம் ஆகிய படங்களின் வசூல் சாதனையை விடுதலை பார்ட் 2 முறியடித்துள்ளது.

click me!