Dhanush Not Act in Police Role in his Movie : தனுஷ் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் இந்த ஒரு ரோல் மட்டும் ஏற்று நடிக்கவில்லை என்பது ரசிகர்களின் வருத்தமாக உள்ளது.
Dhanush Not Act in Police Role in his Movie : தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ், பன்முக கலைஞர்களில் ஒருவரும் கூட. நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என்று திகழ்கிறார். கோடிகளில் புரளும் நடிகர்களில் தனுஷூம் ஒருவர். துள்ளுவதோ இளமை படத்தில் ஆரம்பித்து ராயன் வரை ஏராளமான படங்களில் நடித்திருக்கும் தனுஷ், இதில் பல வெற்றி, தோல்விகளை கொடுத்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் உடன் இணைந்து பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் ஆகிய வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
undefined
கடந்த சில ஆண்டுகளில் தோல்வி படங்களை கொடுத்து வந்த தனுஷிற்கு ராயன் படம் டர்னிங் பாய்ண்டாக அமைந்தது. இப்போது குபேரா என்ற படத்திலும், இட்லி கடை என்ற படத்திலும் நடித்து வருகிறார். குபேரா படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து நாகர்ஹூனா, ராஷ்மிகா மந்தனா, சுனைனா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பாலாவின் பிதாமகன் தான் எனக்கு மன வலிமையை கொடுத்தது – சிவகார்த்திகேயன்!
இந்தப் படம் வரும் 31 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இட்லி கடை படத்தை இயக்கி நடித்து வருகிறார். அதோடு, இந்தப் படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இட்லி கடை படத்தில் தனுஷ் உடன் இணைந்து நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், பிரகாஷ் ராஜ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
இதுவரையில் 50 படங்களில் நடித்துள்ள தனுஷ், பிஸினஸ்மேன், ஐடி கம்பெனி, இன்ஜினியர், வாத்தியார், ஃபுட் டெலிவரி பாய், போட்டோகிராஃபர், அரசியல்வாதி, ஆட்டோ டிரைவர் என்று எத்தனையோ கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். ஆனால், இதுவரையில் அவர் போலீஸ் ரோல் மட்டும் ஏற்று நடிக்கவில்லை. இதற்கு முன்னதாக ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், அருண் விஜய் என்று மாஸ் ஹீரோக்கள் பலரும் போலீஸ் ரோல் ஏற்று நடித்திருந்தாலும் கூட தனுஷ் மட்டும் இன்னும் அந்த ரோலில் நடிக்கவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமே.
49 வயதில் அஜித் பட ஹீரோயினுக்கு பிரபல நடிகருடன் நடந்த இரண்டாவது திருமணம்!
எனினும், இனி வரும் காலங்களில் தனுஷ் இது போன்று ஒரு ரோலில் ஏற்று நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தனுஷ் ஆர்மி கெட்டப்பில் வந்த படம் ஒன்று உண்டு. அதுதான், துள்ளுவதோ இளமை. இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் தனுஷ் ஆர்மி உடையில் பள்ளிக்கு வந்திருப்பார். இது தொடர்பான காட்சி அப்போது டிரெண்டானது. ஆனால், அதன் பிறகு ஆர்மி மற்றும் போலீஸ் உடையில் அவர் நடிக்கவில்லை. சிவகார்த்திகேயன் கூட போலீஸ் மற்றும் ராணுவ கதையில் நடித்து அசத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.