விடுதலை 2 படத்தை மறைமுகமாக தாக்கிய குணா இயக்குநர் – பார்ட் 2 படமே எடுக்க கூடாது: சந்தான பாரதி!

By Rsiva kumar  |  First Published Dec 21, 2024, 9:00 AM IST

Guna Director Santhana Bharathi Talk About Part 2 Movies : பார்ட் 2 படங்களை எடுத்து படங்களோட மரியாதையை கெடுக்க கூடாது என்று இயக்குநர் சந்தான பாரதி ஆவேசமாக கூறியுள்ளார்.


Guna Director Santhana Bharathi Talk About Part 2 Movies : நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தவர் எம்.ஆர்.சந்தானம். நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். இதன் மூலமாக சினிமா பின்னணியை வைத்து திரைக்கு வந்தவர் நடிகரும், இயக்குநருமான சந்தான பாரதி. இயக்குநர் என்றால் சாதாரண இயக்குநர் அல்ல. இன்று உலகமே கொண்டாடும் கண்மணி அன்போடு காதல் நான் எழுதும் கடிதம் என்ற பாடல் இடம் பெற்ற படத்தை இயக்கிய இயக்குநரே இவர் தான். ஆம், கமல் ஹாசனை அப்படி ஒரு தோற்றத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்தவர் தான் இயக்குநர் சந்தான பாரதி. இவர் இயக்கிய படங்களில் குணா படமும் ஒன்று.

பட்டைய கிளப்பிய பாக்ஸ் ஆபிஸ் – விடுதலை 2 முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Tap to resize

Latest Videos

undefined

சந்திரமுகி படத்தை இயக்கிய இயக்குநர் பி வாசு உடன் இணைந்து பல படங்களை இயக்கியுள்ளார். அதில், பன்னீர் புஷ்பங்கள், மது மலர், மெல்ல பேசுங்கள், நீதியின் நிழல், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, என் தமிழ் என் மக்கள், காவலுக்கு கெட்டிக்காரன், சின்ன மாப்பிள்ளை, மகாநதி, வியட்நாம் வீடு, எங்கிருந்தோ வந்தான் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். குணா படம் வெளியாகி 33 ஆண்டுகள் ஆன நிலையி இன்னும் அந்த படத்தின் 2ஆம் பாகம் எடுக்கப்படவில்லை. இது போன்று பல படங்கள் தமிழ் சினிமாவில் ஹிட் கொடுத்திருந்தாலும் அந்த படங்களின் 2ஆம் பாகங்கள் எடுக்கப்படவில்லை.

ஆனால், சமீப காலமாக தமிழ் சினிமாவில் 2ஆம் பாகங்களின் படங்கள் தான் அதிகளவில் வெளியாகி வருகிறது. உதாரணத்திற்கு விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த 2023 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. ஆனால், அதற்குள்ளாக விடுதலை பார்ட் 2 படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. விடுதலை பார்ட் 1 ரூ.48 கோடி வசூல் குவித்திருந்த நிலையில் விடுதலை பார்ட் 2 முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.9 கோடி வசூல் குவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் விடுதலை 2 ரூ.8 கோடி வசூல் குவித்து சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது.

7 வருட காதல்; நடிகர் ஜீவாவின் மனைவி யார் தெரியுமா? க்யூட் லவ் ஸ்டோரி!

இந்த நிலையில் தான் விடுதலை பார்ட் 2 படத்தை பார்த்த இயக்குநர் சந்தான பாரதி தமிழ் சினிமாவில் பார்ட் 2 படமே எடுக்க கூடாது என்று விடுதலை 2 படத்தை மறைமுகமாக தாக்கி பேசினார். இது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: குணா படத்தின் பார்ட் 2 எடுத்து அதனுடைய மரியாதையை நான் கெடுக்க விரும்பவில்லை. ஒரு கிளாசிக் படத்தின் பார்ட் 2 படத்தை எப்போதும் எடுக்கவே கூடாது. அதை அப்படியே விட்டுவிட வேண்டும். பார்ட் 2 படம் எடுக்க விரும்பினால், அதற்கேற்ப கதை இருக்க வேண்டும், கதாபாத்திரங்களும் இருக்க வேண்டும். பார்ட் 2 படங்கள் எடுக்க கூடாது என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் மட்டும் தான் பார்ட் 2 படங்கள் பெரும்பாலும் கை கொடுக்கவில்லை. உதாரணத்திற்கு இந்தியன் 2, சிங்கம் 2, சாமி ஸ்கொயர் 2 ஆகிய படங்களை சொல்லலாம். ஆனால் த்ரில்லர் பேய் படங்கள் நன்றாகவே தமிழ் சினிமாவில் கை கொடுக்கிறது. இதன் காரணமாகத்தான் அடுத்தடுத்து பாகங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

தமிழ் சினிமாவை உல்டா பண்ணி தான் மற்ற மொழிகளில் படங்கள் எடுக்கப்படுகிறது. உதாரணத்திற்கு புஷ்பா மற்றும் கேஜிஎஃப். இது போன்ற கதைகள் ஏற்கனவே தமிழ் சினிமாவில் வந்துள்ளன. கமல் ஹாசன் நடித்த நாயகன் படத்தை உதாரணத்திற்கு சொல்லலாம். ஆனால், மற்ற மொழிகளில் பார்ட் 2 படங்கள் கை கொடுக்கும் அளவிற்கு கூட தமிழ் சினிமாவில் பார்ட் 2 கை கொடுக்கவில்லை என்று எண்ணும் போது சற்று வேதனை அளிக்கிறது.

click me!