கவர்ச்சியும்..லிப்லாக்குமாய்...சாமியார்களை தாக்கும் பார்த்திபன்..இரவின் நிழல் ட்ரைலர்...

By Kanmani PFirst Published May 23, 2022, 7:43 PM IST
Highlights

இரவின் நிழல் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.இந்த வீடியோவில் கவர்ச்சி கொட்டி கிடைப்பதுடன்.லிப்லாக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. 

தனக்கென தனிப்பாதையை அமைத்துக்கொண்ட பார்த்திபன் சமீபத்தில் இயக்கி நடித்திருந்த படம்  'ஒத்த செருப்பு சைஸ் 7' இது 2019  ஆம் ஆண்டு வெளியான திரில்லர் திரைப்படமான இது பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் பதாகையின் கீழ் ஆர். பார்த்திபன் தயாரித்திருந்தார்.. இப்படத்தில் பார்த்தீபன்  மட்டும் தான் நடித்துள்ளார். படத்திற்கான பின்னணி இசையை சி. சத்யா இசையமைத்துள்ளார் மற்றும் படத்தில் ஒரே ஒரு பாடலை மட்டுமே கொண்டுள்ளது, இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் நுழைந்தது. அதோடு பல விருதுகளையும் வாங்கி குவித்தது.

இதையடுத்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பார்த்திபனின் இரவின் நிழல் படம் வெளியாகவுள்ளது.  இப்படம் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு உள்ளது.  பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், பிரிகடா ஆகியோர் நடித்துள்ளனர். இதில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் சமுத்திரகனி, சசி, எழில், மதன் கார்க்கி உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். பின்னர் டீசரைப் பார்த்த ரசிகர்கள், இப்படத்திற்கு நிச்சயம் ஆஸ்கர் விருது கிடைக்கும் என பாராட்டி வருகின்றனர். 

இதன்பின்னர் இரவின் நிழல் படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் ஆடியோ லாஞ்ச் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் ஜூன் 5 -ம் தேதி ஆடியோ வெளியீடும், ஜூன் 24-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த போஸ்டருடன் இந்த முதல் முயற்சிக்கு முதல் டிக்கெட் வாங்கும் கைகளை கால்களாய் நினைத்து வணங்குகிறேன். வடிவேல் ரசிகன் என்னும் வாசகம் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் இரவின் நிழல் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.இந்த வீடியோவில் கவர்ச்சி கொட்டி கிடைப்பதுடன்.லிப்லாக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. சாமியாராக வரலட்சுமி வருகிறார். பார்த்திபன் இதில் கையில் குழந்தையுடன் ஒரு சேரில் தனியாக அமர்ந்திருப்பது போற காட்சிகள் உள்ளன.  

 

click me!