HipHop Adhi : தியேட்டருக்கு வரும் மனநிலை குறைந்துள்ளது... ஓடிடி சரியா? தவறா? - ஹிப்ஹாப் ஆதி சொன்ன நச் பதில்

By Ganesh A  |  First Published May 26, 2024, 2:29 PM IST

கார்த்திக் இயக்கத்தில் வெளியாகி உள்ள PT சார் திரைப்படத்தின் புரமோஷனுக்காக கோயம்புத்தூர் வந்த ஹிப்ஹாப் ஆதிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


கோவை ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் PT SIR திரைப்பட பிரமோஷனுக்காக வருகை தந்த அத்திரைப்படத்தின் ஹீரோ ஹிப் ஹாப் ஆதி மற்றும் படக்குழுவினர் ரசிகர்களை பார்த்து கலந்துரையாடினர். அப்போது ஹிப்ஹாப் ஆதி கோவை Anthem பாடலையும், வாடி புள்ள வாடி பாடலையும் பாடினார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் அவருடன் இணைந்து பாடல்களை பாடினர். பின்னர் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஹிப் ஹாப் ஆதி, இப்படத்தின் பிரமோசனுக்காக சுற்றி கொண்டே இருப்பதால் யாரும் தூங்கவில்லை, அதனால் பார்ப்பதற்கு ஜாம்பி போல் இருக்கிறோம், இருந்தாலும் உள்ளுக்குள் எனர்ஜியாக இருப்பதாக கூறினார். இந்த படம் காமெடி படமாக இருந்தாலும் சீரியஸான விஷயத்தை இப்படத்தில் வைத்திருப்பதாக தெரிவித்தார். பெரிய நட்சத்திர நடிகர் சிறிய நட்சத்திர நடிகர் என்றெல்லாம் இல்லாமல் படம் நன்றாக இருந்தால் ஓடும் என தெரிவித்தார். 

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... தன்னைவிட வயதில் மூத்த நடிகையுடன் காதல் சர்ச்சை.. ஒரே நாளில் உலகளவில் பேமஸ் ஆனவர் - யார் இந்த கோலிவுட் பிரபலம்?

ஓடிடி குறித்தான கேள்விக்கு, அதுவும் ஒரு நல்ல ரீச்சை தருகிறது எனவும் திரையரங்குகளில் திரைப்படம் ஓடி முடிந்த பிறகும் பொதுமக்கள் ஓடிடியில் பார்க்கின்ற வாய்ப்பு கிடைக்கிறது என்றார். அதேசமயம் ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலை இருப்பதால் திரையரங்குகளுக்கு வருகின்ற மன நிலையும் சிறிது குறைந்துள்ளது எனவும் அது சரியா தவறா என்பதை தற்போது கூற முடியாது  இன்னும் சில ஆண்டுகள் போகப் போக என்ன ஆகப் போகிறது என்பதை பார்க்கலாம் என தெரிவித்தார்.  

இதில் பேசிய இயக்குநர் கார்த்திக், இப்படம் பெண்களுக்கு பிடிப்ப்தாக கூறுகின்றனர். பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமைகளுக்கு பிறகு என்ன நடக்கிறது என்பது அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்பதுதான் இந்த படம் என்றார். மக்கள் தற்பொழுது திரைப்படத்தை பிடித்துப் பார்க்க ஆரம்பித்து விட்டனர் என தெரிவித்த அவர், கதை நன்றாக இருந்தால் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வந்து பார்க்கிறார்கள் என தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பின் இடையே அங்கு வந்த இளம் பெண் ஒருவர் ஹிப் ஹாப் ஆதியை பார்த்தவுடன் தேம்பி தேம்பி அழுதார். ஹிப்ஹாப் ஆதியை பார்க்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை என அந்த இளம்பெண் கூறினார்.

இதையும் படியுங்கள்... என் வாழ்நாள் சாதனை இது... குடிசை வீட்டை இடித்து அழகான புது கான்கிரிட் வீடு கட்டிய பாலா - யாருக்காக தெரியுமா?

click me!