ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வரும் பாலா, தற்போது புது வீடு ஒன்றை தன் சொந்த செலவில் கட்டிக் கொடுத்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பேமஸ் ஆனவர் பாலா. அந்நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்களில் கலந்துகொண்ட அவர் அந்நிகழ்ச்சியில் தன்னுடைய டைமிங் காமெடிகளால் ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்தார். அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அவருக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதுதவிர தொகுப்பாளராகவும் கலக்கி வருகிறார் பாலா.
இப்படி சினிமா, சின்னத்திரை இரண்டிலும் கலக்கி வரும் பாலா, அதன் மூலம் சம்பாதிக்கும் பணத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். ஆரம்பத்தில் மருத்துவ வசதி இன்றி தவிக்கும் கிராமங்களை தேர்வு செய்து அக்கிராம மக்களுக்கு தன்னுடைய சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தார். இதுதவிர தன்னிடம் உதவி என வருபவர்களுக்கு வள்ளல் போல் வாரி வழங்கி வருகிறார்.
இதையும் படியுங்கள்... அனிருத் ஸ்டைலை பாலோ பண்ணிய ஏ.ஆர்.ரகுமான்... வைரலாகும் வாட்டர் பாக்கெட் பாடல் மேக்கிங் வீடியோ
பாலாவின் செயலைப் பார்த்து வியந்துபோன நடிகர் ராகவா லாரன்ஸ், அவருக்கு தேவையான உதவிகளை இனி தானும் செய்வதாக உறுதியளித்தார். இதையடுத்து இருவரும் இணைந்து ஏழை பெண்களுக்கு இலவசமாக ஆட்டோ வாங்கி கொடுத்தனர். பின்னர் பாலாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவரை தன்னுடைய தயாரிப்பில் ஹீரோவாக அறிமுகப்படுத்த உள்ளதாக ராகவா லாரன்ஸ் அறிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
இந்த நிலையில் பாலா மற்றுமொரு மாஸ் சம்பவத்தை செய்திருக்கிறார். பாலா வீடருகே உள்ள பேட்மிண்டன் கிரவுண்டில் வேலைபார்த்து வந்த வாட்ச்மேன் தாத்தாவுக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது கனவாக இருந்து வந்தது. அவரின் கனவை நனவாக்கும் விதமாக அவர் வசித்து வந்த குடிசை வீட்டை இடித்துவிட்டு அவருக்கு தன்னுடைய சொந்த செலவில் கான்கிரிட் வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார் பாலா. அவர் கட்டிக்கொடுத்த இந்த வீட்டை ராகவா லாரன்ஸ் தான் திறந்து வைத்துள்ளார். அவரின் இந்த செயலுக்கு பாராட்டு தெரிவித்த லாரன்ஸ், சீக்கிரம் நீயும் இதுபோன்று சொந்த வீடு கட்ட வேண்டும் என்று வாழ்த்தி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... தன்னைவிட வயதில் மூத்த நடிகையுடன் காதல் சர்ச்சை.. ஒரே நாளில் உலகளவில் பேமஸ் ஆனவர் - யார் இந்த கோலிவுட் பிரபலம்?