தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ராயன் திரைப்படத்தில் இடம்பெறும் வாட்டர் பாக்கெட் பாடலின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷ் ஹீரோவாக மட்டுமின்றி பாடகர், பாடலசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமி கொண்டவராக திகழ்ந்து வருகிறார். அவர் இயக்கத்தில் இதுவரை ஒரு படம் ரிலீஸ் ஆகி உள்ளது. அப்படம் தான் பா.பாண்டி. கடந்த 2017-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் அவர் இயக்கிய இரண்டாவது படம் டிராப் ஆனது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக டைரக்ஷனுக்கு ரெஸ்ட் விட்டு இருந்தார் தனுஷ்.
இந்த நிலையில், தற்போது தனது 50-வது படமான ராயன் மூலம் மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார் தனுஷ். இப்படத்தை இயக்கியதோடு மட்டுமின்றி இதில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் தனுஷ். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் தனுஷ் உடன் அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே.சூர்யா, வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இதையும் படியுங்கள்... வனிதாவுக்கே டஃப் கொடுப்பாங்க போல... சைலண்டாக 3வது திருமணம் செய்துகொண்ட பிரபல தமிழ் நடிகை - குவியும் வாழ்த்து
ராயன் திரைப்படம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அப்படம் வருகிற ஜூன் மாதம் 12-ந் தேதி திரைக்கு வர உள்ளது. ராயன் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அப்படம் குறித்த அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே இதிலிருந்து வெளிவந்த அடங்காத அசுரன் என்கிற பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அண்மையில் அதன் இரண்டாவது சிங்கிள் பாடலான வாட்டர் பாக்கெட் என்கிற பாடல் வெளியிடப்பட்டது.
கானா பாடலான இதை கானா காதர் என்பவர் எழுதி இருந்தார். இப்பாடலை சந்தோஷ் நாராயணன் பாடி இருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இப்பாடல் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. அதன்படி வட சென்னையில் பெயிண்டராக வேலை பார்த்து வரும் கானா காதரை ஆடிஷன் வைத்து தேர்வு செய்ததாக கூறியுள்ள தனுஷ். அவரை ஏ.ஆர்.ரகுமானிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். அவரும் காதரிடம் ஜாலியாக உரையாடும் அந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது. இதற்கு முன்னர் அனிருத் தன் பட பாடல்களுக்கு இதுபோன்று மேக்கிங் வீடியோவை வெளியிடுவார், தற்போது முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமானும் அதை பாலோ பண்ணி இருக்கிறார்.
Meet our lyricist from the heart of Chennai ❤🔥 Watch lyrical video 😍❤️🔥
▶️ https://t.co/Y4Kemu7Rcb … pic.twitter.com/jF5x437vHu
இதையும் படியுங்கள்... தேசிய விருது வென்ற இயக்குனருடன் கூட்டணி... சூர்யா டிராப் பண்ணிய படத்தை கையிலெடுக்கிறாரா சிவகார்த்திகேயன்?