
பாலிவுட் நடிகையும், நடிகை பிரியங்கா சோப்ராவின்... சகோதரியான, பரினீதி சோப்ராவுக்கும், ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தலைவர் ராகவ் சதாவுக்கும் (இன்று) மே 13 டெல்லியில் மிக பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. இதில் பரினீதி சோப்ரா - ராகவ் ஜோடிகளின் மிகவும் நெருக்கமான நண்பர்கள் மற்றும், குடும்ப உறுப்பினர்கள் 150 பேர் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர்.
தற்போது இந்த குடும்ப குழாயில் கலந்து கொள்வதற்காக பிரியங்கா சோப்ரா, டெல்லிக்கு வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து பிரியங்கா சோப்ரா, சகோதரியின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறும் இடத்திற்கு செல்வது போன்ற வீடியோக்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் பிரியங்கா சோப்ரா கேப் ஒன்றை அணிந்து கொண்டு... பழுப்பு நிற டீ-ஷைர்ட் மற்றும் பேன்ட் அணிந்துள்ளார். மேலும் ப்ரியங்கா சோப்ரா தன்னுடைய கணவர் மற்றும் மகளுடன் வந்து இந்த குடும்ப நிகழ்வில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிங்கிளாக வந்து ஷாக் கொடுத்துள்ளார்.
Custody: படுதோல்வி அடைந்த 'சாகுந்தலம்' படத்தை விட குறைவான வசூல் செய்த நாக சைதன்யாவின் 'கஸ்டடி'!
சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா, சீட்டாடல் வெப் தொடர் ப்ரோமோஷன் மற்றும், மெட் காலா நிகழ்ச்சியில் கணவருடன் கலந்து கொண்ட நிலையில், குடும்ப நிகழ்ச்சியில் ஏன் கணவர் மகள் இல்லாமல் கலந்து கொண்டுள்ளார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.