ஹீரோவாகும் இயக்குனரின் வாரிசு..! முரட்டு வில்லனாக மோதப்போகும் கெளதம் மேனன்!

Published : May 13, 2023, 12:32 AM IST
ஹீரோவாகும் இயக்குனரின் வாரிசு..! முரட்டு வில்லனாக மோதப்போகும் கெளதம் மேனன்!

சுருக்கம்

திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகும் இயக்குனரின் வாரிசுக்கு வில்லனாகிறார் கெளதம் மேனன். இப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் தயாரிப்பு நிறுவனமான ஆர்கே செல்லுலாய்ட்ஸ், ஏற்கனவே தெனாலி மற்றும் கூகுள் குட்டப்பா ஆகிய படங்களை தயாரித்திருந்த நிலையில் தற்போது ‘ஹிட்லிஸ்ட்’ என்கிற படத்தை தயாரித்து வருகிறது. பிரபல இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகும் அவரது முதல் படமாக இது உருவாகி வருகிறது.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய சூரியகதிர் மற்றும் கார்த்திகேயன் இருவரும் இணைந்து இந்த படத்தை இயக்கி வருகின்றனர். நடிகர் சரத்குமார் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சினிமா மோகத்தில் கருவை களைத்து.. வாழ்க்கையையே சீரழித்துக்கொண்ட நடிகை! விவாகரத்தாகி அசிங்கப்பட்டது தான் மிச்சம்

மேலும் இந்த படத்தில் சித்தாரா, முனீஸ்காந்த், ஐஸ்வர்யா தத்தா, ஸ்மிருதி வெங்கட், பாலசரவணன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, கேஜிஎஃப் புகழ் கருடா ராமச்சந்திரா மற்றும் அனுபமா குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் பயங்கரமான வில்லனாக நடிப்பதன் மூலம் இந்தப்படத்தின் நட்சத்திர பட்டியலில் தற்போது இணைந்துள்ளார். அவர் நடித்த சில முக்கியமான காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன.

'தி கேரளா ஸ்டோரி' பட விவகாரம்! மேற்கு வங்கம் அரசு மற்றும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

இந்த படத்தின் ஒளிப்பதிவை ராம்சரண் கையாள, படத்தொகுப்பை ஜானும் கலை இயக்கத்தை அருணும்  கவனிக்கின்றனர். ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படத்திற்கு தேவையான கமர்சியல் அம்சங்கள் நிறைந்த ஆக்சன் திரில்லராக இந்த படம் இருக்கும். கிட்டத்தட்ட முடிவுறும் தருவாயில் இருக்கும் இந்த படத்தின் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என் திருமணக் கனவு அதுதான்: காதலர் சாந்தனுவுடன் வாழ்வு குறித்து மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்!
விஜே சித்ராவைத் தொடர்ந்து... நடிகை ராஜேஸ்வரியின் விபரீத முடிவு: திரையுலகைத் தாக்கும் மரண அலை!